எந்த ஒரு நல்ல, தீய பலன் நம் முற்பிறவியின் தொடர்ச்சியே. இதை புரிந்து கொண்டால் எச்சூழல் நிலையிலும் கவலையில்லாமல் வாழலாம்.
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்.
மனித பிறவியின் கட்டமைப்பே நன்மை, தீமை இரண்டும் கலந்ததே.
ஆசிரியர் பிள்ளை மக்கு .படிப்பபறிவில்லாதவன் வீட்டு பிள்ளை கலெக்டர் என அவரவர் செய்த தனிப்பட்ட கர்மத்தை அனுபவிக்கவே பிறப்பெடுக்கிறோம்.
உண்மையை சொன்னால் நல்ல விளையாட்டு வீரனின் மகன் அவரை போல சிறப்பாக வருவதில்லை. இதிலிருந்தே இறைவனின் படைப்பின் ரகசியம் புரியும்.
அறிவியலும் இதை நிருபிக்க இயலவில்லை. தந்தையின் மரபணு தனயனிடமும் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் தந்தை அளவு முன்னேற்றமில்லை. ஆதலால்
இங்கு உயர்ந்தவர்,தாழ்ந்தவர் யாருமில்லை.
வாழும் காலத்தில் பணம் சேர்க்க முற்படும் நாம், இறப்பிற்கு அப்பால் என்ன என்பதை அறிய மறுக்கிறோம்.
இறைவனின் நாமம்,நாம் செய்த புண்ணியம் மட்டும் நம்மை பாதுகாக்கும்.










