பேருந்து நிலையத்தில் இருந்து வெளி வருவது ஜெயவிலாஸ் பேருந்து . ஒரு நேரத்தில் தூத்துக்குடியில் இருந்து காலை மாலை இரு வேளைகளில் ஐந்து ரூபாய் கட்டணத்தில் மதுரைக்கு செல்லலாம் . அதிக சந்தோஷமாக இருக்கும் .
1969 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை டூ மதுரை இந்த பஸ்ஸில் ரூ 1.70 கட்டணம். ஸ்டாண்டிங் அனுமதி இல்லை.
1965ல்.மதுரையிலிருந்து.விருதுநகருக்கு.இரண்டுரூபாய்.நாற்பது.காசுகள்தான்
மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு அப்போ 2.00 ரூபாய் தான்.
1974களில்இராஜபாளையம் டூ மதுரைக்குகட்டணம் 3. 50 தான்.
போக வர ஏழு ரூபாய் தான்
மூன்று ரூபாய்க்கு காலேஜ்கவுஸில் சாப்பாடு அன்றைய தினம் அது ஜாலி தான்.
போனா நாராயண மூர்த்தி அய்யர் கடை பால்கோவா கிலோ 1.50 ரூபாய்க்கு 50 பைசாவுக்கு ஸ்ரீகுமரன் கடை கடலை மிட்டாய் மற்றும் தேன்மிட்டாய் வாங்கிக்கிட்டு
0.50 பைசாவுக்கு அண்ணாச்சி கடைல பொட்டுக்கடலை பொரி, மிக்ஸர் வாங்கிக்கிட்டு, பஸ்ல ஏறி உட்கார்ந்து தின்னுக்கிட்டே மதுரை வந்துடுவோம்
அய்யாசாமின்னு டிரைவர்
குப்புசாமி கண்டக்டர்
இவுங்கள்ளாம் இருக்காங்களான்னு தெரிபல
ஆமா
அப்போல்லாம் இப்போ மாதிரி ஹார்ன் லாம் இல்லை
மௌத் ஹார்ன் தான்
அதை புடிச்சி நம்ம அய்யாசாமி அமுக்கறத பாக்கவே ஒரு கூட்டம் கூடும்.










