நவபுலியூர் யாத்திரையின் 4வது ஸ்தலம் ஓமாம்புலியூர்
இறைவன்: ப்ரணவ வ்யாக்ர புரீசுவரர் எனும் துயர்தீர்த்தநாதர்
இறைவி : புஷ்பலதாம்பிகை
இது குருபரிகார ஸ்தலமாகும். அம்பிகைக்கு மோட்ச மார்க்கத்தை ப்ரணவம் என்னும் ஓங்கார மந்திரத்தை ஸ்ரீ தட்சணாழூர்த்தி வடிவாக உபதேசித்த திருத்தலம். வியாக்ரபாத முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் மோட்ச உபதேசம் அளித்த இடம் இதுவாகும். இத்தல அமைவிடம் எருக்கத்தம்புலியூரிலிருந்து காட்டுமன்னார் கோயில் வழியாக இத்தலத்தை அடையலாம்.
காட்டுமன்னார் கோவிலிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
தொடர்புக்கு ஜகதீச குருக்கள்: 04144 – 264845
நாளை நவபுலியூர் யாத்திரையின் 5வது ஸ்தலமான காணாட்டமுள்ளுர் பற்றி பார்க்கலாம்…










