ஜாதகம் சரியில்லாதவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய சித்தர் ஜீவசமாதி.
ஸ்ரீமத் வேங்கட சுபானந்த ஸ்வாமிகள் (தாதா சித்தர்) சென்னையில் உள்ள ஒரு சக்திவாய்ந்த சித்தரும், 1796-ல் ஜல ஜீவசமாதி அடைந்தவருமாவார். ஓல்ட் வாஷர்மேன்பேட்டையில் அமைந்துள்ள இவரது சமாதி.
#சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை மகாராணி தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகில் ஸ்ரீமத் வேங்கடசுப்பானந்த சுவாமிகளின் #ஜீவசமாதி அமைந்துள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்த ஜீவசமாதியை ‘தாத்தா கோயில்’ என்று அன்புடன் அழைக்கிறார்கள்.
இங்கு தாத்தா கோயில் என்று கேட்டால்தான் அனைவருக்கும் வழி தெரிகிறது. மகாராணி போஸ்ட் ஆபீஸ் பின்புறம் கோதண்டராமன் தெருவில் அமைந்துள்ளது இந்த சித்தர் ஜீவசமாதி. வேங்கட சுப்பானந்த சுவாமிகள் ஜல ஜீவசமாதி பக்தர்களால் வணங்கப்படும் அருள் மிகுந்த தலமாகும். கோயிலின் சிறப்புகளும் அதிசயங்களை நிகழ்த்தும் சித்தரைப் பற்றியும் இந்தப் பதிவில் அறிவோம்.
நீர் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரகக் கோளாறு, நீரால் வரக்கூடிய கண்டங்களை தீர்ப்பவராகவும், மன பயம், மனக்குழப்பம் இருப்பவர்கள் இவரை வழிபட, மன தைரியம், மன வலிமை அதிகரிக்கும்.
மணலை அள்ளி எடுத்துக் கொடுத்து உணவு பொருட்கள் ஆக்கினார். குளத்து தண்ணீரை எடுத்து தெளித்து நோய்களை விரட்டினார்.
இக்கோயிலுக்கு செல்பவர்கள் எலுமிச்சம் பழம் வாங்கிச் சென்று, அந்தப் பழத்தை அவர் பாதத்தில் வைத்து தந்ததும் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த எலுமிச்சைக்கு அதீத சக்தி உள்ளதாக நம்புகின்றனர். தொடர்ந்து இங்கு வந்து 3 நல்ல எண்ணெய் விளக்கு போட வேண்டியது கிட்டும்.










