• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

நவக்கிரக பரிகாரக் கோயில்களில் எப்படி வழிபடுவது..?

siddharbhoomi by siddharbhoomi
July 22, 2018
in ஆன்மிகம்
0
நவக்கிரக பரிகாரக் கோயில்களில் எப்படி வழிபடுவது..?
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

நவக்கிரக பரிகாரக் கோயில்களில் எப்படி வழிபடுவது..?

1.சூரியன்; சூரியனார் கோவில்;
இங்கு வந்து முதலில் நவக்கிரகங்களுக்கு அருள் புரிந்த திருமங்கலங்குடி ஸ்ரீ பிராண நாதேஸ்வரரை வழிபட்டு பின்பு சூரியனார் கோவில் சென்று கருவறையில் சூரிய சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சூரியனை வழிபடுவதாலும் இங்குள்ள நவக்கிரகங்கள் வழிபடுவதாலும் அனைத்து தோஷங்களும் நீங்கப் பெறுவர். ஞாயிறு வழிபாடு சிறப்பு.

வழித் தடம்; கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

திருவலஞ்சுழி;
தஞ்சாவூர் அருகிலுள்ள திருவலஞ்சுழியில் உள்ள சுபர்தீஸ்வரர் கோவிலில் சூரியன், சனி ஆகிய இரண்டு கிரகங்களும் நேருக்கு நேர் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு இருவரும் நட்பு நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள் சூரியன் மற்றும் சனி பகவானால் ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் இத்திருக்கோவில் சென்று அர்ச்சனை செய்தால் தோஷம் நிவர்த்தியாகும்.

சூரக்குடி;
சூரியனுக்கு சாபம் நீக்கி அருள் தந்த சுந்தரேசர் சன்னதி. சூரிய, சனி தோஷங்களை நீக்கும் ஸ்தலம்.
வழித் தடம்; குன்றக்குடி கிழக்கே 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

2. சந்திரன்; திங்களுர்;

தாய்க்குப்பீடை நோய், மன நிலை பாதிப்பு, சந்திரன் ஜாதகத்தில் நீசம், மறைவு, பாப கிரக சேர்க்கை உள்ளவர் இங்குள்ள கைலாச நாதர் கோவிலில் உள்ள சந்திரனை வழிபடுவதால் தோச நிவர்த்தியாகும்.

வழித் தடம் ; கும்பகோணம்- திருவையாறு சாலையில் உள்ளது.

3.செவ்வாய்; வைத்தீஸ்வரன் கோவில்;
ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்பு, திருமணத்தடை, தொழில் சிக்கல், வீடு, மனை வாங்க, அடிக்கடி விபத்து போன்றவை ஏற்பட்டாலும், செவ்வாய் தெசை நடைபெறும் காலங்களிலும் இங்கு தனி சன்னதியில் உள்ள செவ்வாய்க்கு தீபம் ஏற்றி தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோசமும் நீங்கும்
வழித் தடம்; மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது

பழநி- திருவாவின்குடி;                                                                                                          செவ்வாய்க்கிழமை மதியம் உச்சிகால பூஜையில் முருகனுக்குப் பால் அபிசேகம் செய்து வழிபட தோசம் நீங்கும்.
வழித் தடம்; திண்டுக்கல்லிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்திலுள்ள பழனியில் அடிவாரத்திலுள்ள கோவில்.

4. புதன்; திருவெண்காடு;
குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வமின்மை, தடங்கல்கள் ஏற்படும் போது இங்குள்ள புதன் வழிபட்ட ஸ்ரீ ஸ்வேதா ரண்யேஸ்வரரையும் தரிசித்து பின்பு அங்கு எழுந்தருளியுள்ள புதனையும் வழிபட்டால் தோசங்கள் நீங்கும்.

வழித் தடம்; மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையிலுள்ளது.

5.குரு; ஆலங்குடி; திருமணத்தடை, புத்ர தோஷம், குடும்ப ஒற்றுமை நிம்மதி குறைவு, ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர் வியாழக்கிழமை இங்குள்ள குரு பகவானை நெய் தீபம் ஏற்றி, வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.

வழித் தடம்; கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் உள்ளது.

தென்குடி திட்டை; அருள் மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜ குருவாக நின்ற கோலத்தில் தனி சந்நிதியில் அருள் பாலித்து வருகிறார். எனவே, இத்தலமே குரு பரிகாரம் செய்வதற்கு சிறந்த தலம் என்பது பெரியோர் கருத்து.

வழித் தடம்; தஞ்சாவூர்- திருக்காவூர் சாலையில் பள்ளி அக்ஹாரம் வழியாக மெலட்டூர் செல்லும் பாதையில் உள்ளது.

தாருகாபுரம்;
இங்குள்ள சிவன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி பாதத்தில் சுற்றிலும் ஒன்பது நவகிரகங்கள் உள்ளன. இவரை வழிபட்டால் குரு எந்த ராசிக்கு மாறினாலும் நற்பலன் கிடைக்கும்.

வழித் தடம்; ராஜபாளையம் அருகிலுள்ள வாசுதேவ- நல்லூரிலிருந்து பேருந்து வசதி உண்டு.

6. சுக்கிரன்; கஞ்சனூர்; சுக்கிர தோஷம், பலஹீன, உள்ளவர் இங்குள்ள மூலவர் சுக்ரீஸ்வரரை சுக்கிர பகவானாக் கருதி வழிபட்டால் தோஷம் நீங்கும்.
வழித் தடம்: சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ளது.

திருநாவலூர்; இங்குள்ள பார்கவீஸ்வரரை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும். சுக்கிர தெசை பாதிப்புக்கும் உரிய ஸ்தலம்.

வழித் தடம்; விழுப்புரம்- உளுந்தூர் பேட்டை சாலையில் உள்ளது.

7. சனி திருநள்ளாறு; ஜாதகப்படி 7 1\2 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷடம் சனி ஏற்படும் காலங்களில் இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரையும் போக மார்த்த அம்மனையும் வழிபட்ட பிறகு சனீஸ்வரர் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றி வழிபட தோசம் நீங்கும்.
வழித் தடம்; மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ. தூரத்திலுள்ளது.

குச்சனூர்; 7 1\2 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷடம சனி , கண்டச்சனி ஆரம்பிக்கும் பொழுது இங்கு சுயம்புவாய் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானை சனிக்கிழமை எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சனி பகவானின் பிரம்ம ஹத்தி தோசம் நீங்கிய ஸ்தலம்.

வழித் தடம்; தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ளது.

சேந்தமங்கலம்;
சனி நடைபெறும் காலங்களிலும்சனி தெசை, சனி புத்தி நடைபெறும் காலங்களிலும் இங்குள்ள தத்தகிரி முருகன் கோவிலில் உள்ள சனீஸ்வரரை சனிக்கிழமை வழிபட வேண்டும்.

வழித் தடம்; சேலம், நாமக்கல் அருகில் கொல்லிமலை செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது.

திருவாதவூர்; சனி பாதிப்புள்ள்வர் இங்குள்ள சனீஸ்வரனை சனிக்கிழமை வழிபட வேண்டும். சனி, ஈஸ்வரனைப் பிடிக்க முயன்று, கால் முடமாகி, கால் சரியாக ஈஸ்வரனை நோக்கி தவமிருந்த இடம்.
வழித் தடம்; மதுரை மேலூர் சாலையில் உள்ளது.

ஸ்ரீ வை குண்டம்; மனிதனின் மன நிம்மதியை நிர்ணயிப்பவர் சனி பகவான். அவரவர் செய்யும் வினையைப் பொறுத்து நல்லதையும் கெட்டதையும் தருவார். சனிபகவானின் அம்சத்துடன் சிவ பெருமான் இத்தலத்தில் காட்சி தருகிறார்.

இத்தலத்தில் சனி திசையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பரிகாரம் செய்தால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும், இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம்.
திருநள்ளாறு சனீஸ்வரன் திருக்கோவிலுக்கு ஈடானது இக்கோவில்

வழித் தடம்; திரு நெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

திருநாரையூர்;
சனீஸ்வரர் தனது இரு மனைவிகள் மந்தா தேவி. ஜேஷ்டா தேவி ஆகியோருடன் இவ்வாலயத்தில் அருள் பாலிக்கிறார். மூலவருக்கு இல்லாத கொடி மரம் இங்கே சனீஸ்வரருக்கு உண்டு.

பலிபீடமும், காகவாகனமும் கொண்ட்து சனீஸ்வரரின் தனிச்சிறப்பு. தம்பதி சமேதராய் மட்டுமல்ல, இவ்வாலயத்தில் சனீஸ்வரர் தனது இரு மகன்களுடன் [குளிகன், மாந்தி] குடும்ப சமேதராய் அருள் புரிகிறார்.

வழித் தடம்; கும்பகோணத்துக்கு அருகே நாச்சியார் கோவிலுக்கு பக்கத்தில் திருநாரையூர் உள்ளது.

8. ராகு: திருநாகேஸ்வரம்; ராகுவினால் ஏற்படும் அனைத்து தோசங்களினால் திருமணத்தடை, புத்ர தோசம், மாங்கல்ய தோசம் ஏற்படும்.. இங்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி, ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகுவிற்கு பாலாபிசேகம், அர்ச்சனை செய்து வழிபட நாக தோசம் நீங்கும்.

வழித் தடம்;கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது.

ஸ்ரீ பெரும் புதூர்;
ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ மத் ராமானுஜர் எழுந்தருளியுள்ள இத்தலம் சென்று நெய் தீபம் ஏற்றி, ஸ்ரீ மத் ராமானுஜரையும், ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் ஸ்ரீ யதிராஜ நாதவல்லித் தாயாரையும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் வழிபட நாக தோசம் நீங்கும். கால சர்ப்ப தோஷம் பரிகார தோசம்.

வழித் தடம்; செங்கல்பட்டுக்கு அருகில் உள்ளது. கதிராமங்கலம்;
இங்குள்ள வன துர்க்கை முன் பக்கம் பார்ப்பதற்கு பெண் உருவமாகவும் பின்பக்கம் பார்ப்பதற்கு நாகம் படம் எடுத்த்து போன்றும் தோன்றும்.

கம்பர் வழிபட்ட ஸ்தலம். ராகு, கேது தோசம், கால சர்ப்ப தோசம் உள்ளவர் துர்க்கைக்கு அபிசேகம் செய்து வழிபட கிரக தோசம் நீங்கும். இத்துர்க்கை ல்லித சகஸ்ர நாமத்தில் வரும் வித்யா வன துர்க்கையாகும்.

வழித் தடம்; கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து 3 கி.மீ. தூரம்.

9.கேது; திருக்காளத்தி; பஞ்ச லிங்கங்களில் வாயு லிங்கம் உள்ள இடம். கண்ணப்பனுக்கு காட்சி தந்த ஸ்தலம். இங்குள்ள காளத்தீஸ்வரருக்கு ருத்ரா பிசேகம் செய்து அர்ச்சனை செய்ய கேதுவினால் ஏற்படும் தோசம் நீங்கும். கால சர்ப்ப தோச பரிகார ஸ்தலம்.

வழித் தடம்; திருப்பதிக்கும் சென்னைக்கும் நடுவில் உள்ளது.

கீழ்ப்பெரும் பள்ளம்;
இங்குள்ள நாகநாத சாமி கோவிலில் தனி சன்னதியில் உள்ள கேதுவை வழிபட கேதுவினால் ஏற்படும் தோசம் நீங்கும்.

வழித் தடம்; மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் பூம்புகாரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ளது.

 

Previous Post

எதுவந்தாலும் நான் உனக்கு அருள் செய்யக் காத்திருக்கிறேன்..!

Next Post

இறைவன் வழங்கிய கொடை நம் வாழ்க்கை..!

Next Post
இறைவன் வழங்கிய கொடை நம் வாழ்க்கை..!

இறைவன் வழங்கிய கொடை நம் வாழ்க்கை..!

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »