வாழ்க்கையில் நீ கடக்கின்ற ஓவ்வொரு நாளும் உன்னுள் எவ்வளவு சிந்தனைகள்.
அதில் நேர்மறை எதிர்மறை என எத்தனை பரிமானங்கள்.அது உன் இயல்பில் வரும் எண்ணத்தின் சாயலாய் வரும் சிந்தனைகள்,
நீ பார்த்தவை நீ கேட்டவையை நினைத்து உன்னுள் எழும் சிந்தினைகள்.
அவற்றுள் எதிர்மறை எத்தனையோ நேர்மறை எத்தனையோ.
நேர்மறை சிந்தனைகள் உன்னில் பதிந்து உன்னை நேர்மறை காற்றில் போக செய்யும்.
எதிர்மறை சிந்தனைகள் உன்னை அந்த சிந்தனைகளியே தேங்க வைத்து உன்னை மீறி உன்னை சூழந்து கொண்டு இருக்கும்.
நாளடைவில் அது உன்னுடைய எண்ணங்களின் வெளிப்பாட்டாய் மாற நேரிடும்.
அது உன்னை சூழும் போது அதை நீ உன்னில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்பதை விட அதை நீ நேர்மறையாய் மாற்ற முயற்சி செய்.
அதற்கு என் துணை எப்போதும் உண்டு.
எதையும் உன்னில் இருப்பவையை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் அதை தூக்கி எறிய வேண்டும் என்று நினைக்காதே.
அதை எதிர்மறையை வேறு திசையிலான நேர்மறையில் மாற்று,
நிச்சயம் உன்னுள் நீ உன்னை மாற்ற நினைக்கும் எதுவும் சாத்தியமாக உனக்கு அமையும்.
ஏனென்றால் உன்னில் இருக்கும் நீ என்றது நான் என்ற உன் சாய்தேவாவை குறிக்கும்.
உன் அன்பின் ஆழத்தையும் உன் பக்தியின் தூய்மையையும் உன் நம்பிக்கை பொறுமை,
எதையும் எதிர்நோக்கி தாங்கும் உணர்வு எவ்வளவு உன்னதமானது என்பதை நான் அறிவேன் .
அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன்.
அதனால் எல்லாம் சரியாகிவிடும் எதற்கும் அஞ்சாதே உன்னோடும் உன் குடும்பத்தோடும் நான் என்ற உன் சாய்தேவா இருக்கிறேன்.
நீ என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை.
நீ ஜெயமாக எல்லா செல்வ வளங்களைப் பெற்று சீரும் சிறப்புமாய் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய்.
ஓம் ஸ்ரீ சாய் ராம்..











