30 வருடங்களுக்கு முன்பு தீபாவளி எப்படி இருந்தது..?
ஒரே ஒரு சீனிவெடி பாக்கெட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வெடியாக எண்ணி எண்ணி வெடித்தது – நினைவில் இருக்கிறது..!
தெரு தெருவாக சென்று வெடிக்காத வெடிகளை பொறுக்கி வந்து புதுரக வெடிகளை தானாக தயார் செய்தது – நினைவில் இருக்கிறது..!
பணக்கார வீட்டுக் பிள்ளைகள் பட்டாசு வெடிப்பதை அருகில் நின்று வாய்பிளக்க வேடிக்கை பார்த்தது – நினைவில் இருக்கிறது..!
பொறுக்கி வந்த அணுகுண்டு ஆட்டோ பாம்’களை
பந்தாவாக வெடித்தது – நினைவில் இருக்கிறது..!
வெடிமருந்து அப்பிய கையோடு சாப்பிட அமர்ந்து அம்மாவிடம் அடி வாங்கியது – நினைவில் இருக்கிறது..!
பேப்பரில் வெடி மருந்துகளை மொத்தமாக சேர்த்து கொளுத்தும்போது ஏற்பட்ட தீக்காயம் – நினைவில் இருக்கிறது..!
வெடி வாங்கி வரும் அப்பாவின் வருகைக்காக வாசலில் வந்து வந்து எட்டிப் பார்த்து சென்றது – நினைவில் இருக்கிறது..!
வெடிகளை கையில் பிடித்து எரிந்து பெரியவர்களிடம் திட்டு வாங்கியது – நினைவில் இருக்கியது..!
அண்ணே வெடி இருக்கு, அக்கா வெடி இருக்கு என்று
ரோட்டில் நடந்து வருபவர்களை ஓரமாக நடக்க வைத்து பயமுறுத்தியது – நினைவில் இருக்கிறது..!
பிடித்த ஆடைகளை வாங்க முடியாமல் விலை குறைவான ஆடைகளை வாங்கி, அப்பா அம்மாவிடம் கோபித்துக் கொண்டது – நினைவில் இருக்கிறது..!
இன்னமும் 20 நாள் இருக்கிறது, இன்னமும் 10நாள் இருக்கிறது
என தீபாவளியின் வருகைக்காக நாட்களை எண்ணியது – நினைவில் இருக்கிறது..!
அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா என அனைவரிடம் சேகரித்த தீபாவளி காசை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து செலவு செய்தது – நினைவில் இருக்கிறது..!
தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும்போது புத்தாடைகளை அணிந்து சென்று பந்தா காட்டியது – நினைவில் இருக்கிறது..!
அம்மா ஒளித்து வைத்த அதிரசத்தை யாருக்கும் தெரியாமல் திருடித் திண்றது – நினைவில் இருக்கிறது..!
ஊதுபத்தி”க்கு பதிலாக கொசுபத்தியை கொளுத்தி வெடிகளை வெடித்தது – நினைவில் இருக்கிறது..!
ஒரு பத்தி அனையப் போகிறது என்று தெரிந்ததும் இன்னொரு பத்தியை அதிலேயே ஒட்டி வைத்து ஊதி ஊதி எரிய வைத்தது – நினைவில் இருக்கிறது..!
பாம்பு மாத்திரைகளை வரிசையாக அடுக்கி மாடர்ன் ஆர்ட் போல கொளுத்தியது – நினைவில் இருக்கிறது..!
வெடிக்காத லட்சுமி வெடிக்குள் சீனி வெடியை சொருகி பில்டப் செய்தது – நினைவில் இருக்கிறது..!
சகதிக்குள் வெடிகளை அமுக்கி வைத்து வெடித்தது – நினைவில் இருக்கிறது..!
மொட்டை மாடியில் நின்றுகொண்டு ஆங்காங்க வெடிக்கும் வானவேடிக்கைகளை பார்த்து கைதட்டி ரசித்தது – நினைவில் இருக்கிறது..!
வெடி பாக்கெட்களை கையில் பிடித்துக்கொள்ள அசிஸ்டென்ட்டை (அடிமை) வைத்தது – நினைவில் இருக்கிறது..!
முப்பது வருடங்களுக்கு முன்பு நாங்கள் கொண்டாடிய தீபாவளியை இப்போதைய சிறுவர்களும் இளைஞர்களும் கண்டிப்பாக கொண்டாட முடியாது..!
இப்போதைய தீபாவளி குடிப்பதற்கும், டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், புதிய படம் பார்ப்பதற்கு மட்டுமே..!
ஆனால் எங்களுடைய நாட்கள் (அப்போதைய தீபாவளி) என்றும் காலத்தால் மறக்க முடியாதவை..!
By
1980 to 1990 Kids











