மாதங்களில் நான் மார்கழியாவேன்” என்று கூறுகிறானென்றால் மார்கழியின் சிறப்பை யூகித்துக்கொள்ளுங்கள்.
அப்படி என்றால் அதை ஏன் பீடை மாதம் என்கிறார்கள் என்று சிலர் கேட்கக்கூடும். அது பீ டை மாதம் அல்ல… பீடுடைய மாதம் (அதாவது செல்வம் மிகுந்த மாதம்) என்பது தான் மருவி நாளடைவில் பீடை மாதம் என்றாகிவிட்டது.
மார்கழி மாதம் என்பது தேவர்களது ஒரு நாளில் விடியற்காலை பொழுதாகும். விடியற்காலை என்றாலே மங்களகரமானது தானே? எனவே இந்த பெருமை பொருந்திய மாதம் முழுதும் இறை வழிபாட்டுக்கு என்றே பெரியோர்கள் ஒதுக்கிவைத்துள்ளனர். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால்,
வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்” என்று வட மொழியில் சொல்வர். “மார்கம்” என்றால், வழி- “சீர்ஷம்” என்றால், உயர்ந்த- “வழிகளுக்குள் தலைசிறந்தது” என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது.
தமிழகத்தின் மார்கழி மாதம் வந்துவிட்டாலே அதிகாலை வேளையில் வைணவக் கோயில்கள் மட்டுமின்றி அனைத்து ஆலயங்களிலும் பூஜை வழிபாடுகளும், பக்தி இசையும் மணக்கத் தொடங்கிவிடும்.










