மூலாதார சக்தி மையத்தில் நான்கு இதழ் கொண்ட தாமரை உள்ளது. அதன் மத்தியில் யோனி
இருக்கிறது. யோனியின் மத்தியில் மேற்கு முகமாகப் பார்த்தபடி லிங்கம் உள்ளது. அதன்
தலையில் ரத்தினம் போன்ற பிளவு உள்ளது.
அழிவற்ற நிலைத்தன்மையை வழங்கும் பிரம்மந்திரத்திற்கு அழைத்துச் செல்லும் வாயிற்கதவை மூடிய படி குண்டலினி சக்தி உறங்கிக் கொண்டுள்ளது.
மனம், உயிர்சக்தி மற்றும் வாசியினால் உண்டாகும் அக்னி இவற்றை சேர்த்து இயக்குவதால், விழித்தெழும் குண்டலினி சக்தி ஊசி வடிவம் பெற்று, சுழுமுனை நாடியா துளைத்துக் கொண்டு மேலேறி சகஸ்ரார சக்தி மையத்திற்கு செல்கிறது.
யோகி குண்டலினி சக்தியை சிரத்தையுடன், தகுந்த வழிகாட்டுதலின்படி. சரியாக புரிந்துக் கொள்ளும் தன்மையுடனும் சுழுமுனை நாடியை திறக்க வேண்டும். சகஸ்ரார சக்தி மையத்தை அடைய செய்ய வேண்டும்.
குண்டலினி சக்தி விசுத்தி சக்தி மையத்தை அடைந்தவுடன், யோகி மோட்சத்தை அடைவதற்கான வாயில் கதவு திறக்கப்படுகிறது.
குண்டலினி சக்தி சகஸ்ரார சக்தி மையத்தை அடைந்து நிலை கொண்டவுடன், யோகி மோட்சத்தை அடைந்து, அதனுள் கலந்து வார்த்தைகளால் விளக்க இயலாத, பேரானந்த நிலையை உணர்கிறார்.











