• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

மிரா அல்பாசா-அன்னை (மதர்) வாழ்க்கைக் குறிப்பு

siddharbhoomi by siddharbhoomi
February 21, 2020
in வரலாறு
0
மிரா அல்பாசா-அன்னை (மதர்) வாழ்க்கைக் குறிப்பு
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

மிரா அல்பாசா-அன்னை (மதர்) வாழ்க்கைக் குறிப்பு

மிரா அல்பாசா (Mirra Alfassa) (பெப்ரவரி 21, 1878 – நவம்பர் 17 1973) என்பவர் ஒரு ஆன்மிகவாதி ஆவார். இவரை நேசிப்பவர்களால் அன்னை (மதர்) எனவும் அழைக்கப்படுகிறார். இவர் சிறீ அரவிந்தருடன் இணைந்து ஆன்மிகத்தில் ஈடுபட்டார். அரவிந்தர் இவரை அம்மா என்ற பெயரிலேயே அழைத்தார்.

இவர் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தினை புதுச்சேரியில் நிறுவினார். மேலும் ஆரோவில் எனும் நகரத்தினைத் தோற்றுவித்தார். இதன் மூலம் ஒருங்கிணைந்த யோகாவினைப் பற்றி எழுத்தாளர்கள் மற்றும் குருக்கள் போன்றவர்கள் தெரிந்துகொள்வதற்கான உத்வேகத்தினையும், ஆர்வத்தினையும் இவர் ஏற்படுத்தினார்..

இவர் 1878 ஆம் ஆண்டில் பாரிசு மாநகரில் பிறந்தார். இவர் அறிய இயலா இயக்கம் பற்றி மேக்சு தியானிடம் கற்பதற்காக அல்சீரியா நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார். இவரின் பெற்றோர்கள் துருக்கி, எகிப்து நாட்டினர். இவர் சிறீ அரவிந்தரை மார்ச் 20, 1914ல் புதுச்சேரியில் ஆர்யா என்னும் பத்திரிகையில் பணி புரியவும், தொகுப்புப் பணி செய்யவும் சந்தித்தார்.

பின் முதலாம் உலகப்போர் காரணமாக புதுச்சேரியை விட்டு ஜப்பான் நாட்டிற்குச் சென்று சில ஆண்டுகள் வாழ்ந்தார். ஜப்பானில்ஸ்ரீ ரவீந்திரநாத் தாகூரை சந்தித்தார். 1920ல் அவர் மீண்டும் புதுச்சேரிக்கு வந்து வசித்தார். அதன் பின் நாடு திரும்பிய இவர் உலகில் உள்ள பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

இறுதியில் அரவிந்தர் மற்றும் அவரை பின்பற்றுபவர்களுடன் தங்கினார் இந்தியாவில் உள்ள புதுச்சேரியில். இவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் அங்கே இருந்த குடியிருப்பானது சில ஆண்டுகளில் ஆசிரமம் ஆனது. அங்கு அரவிந்தருடன் ஒருங்கிணைந்த யோகாவினைப் பற்றி மக்களுக்குப் போதனை செய்தனர். அரவிந்தரின் இறப்பிற்குப் பின் ஆசிரமத்தில் பள்ளிக்கூடம் ஒன்றைத் துவங்கினார்.

Auroville Pondicherry

மேலும் சோதனை அடிப்படையில் ஆரோவில் எனும் தன்னாட்சி நகரத்தினைத் தோற்றுவித்தார். இந்த நகரத்தின் முக்கிய நோக்கம் இங்கு உள்ள மக்கள் தேசியம், மொழி, சமயம்,சாதி ஆகிய எந்த வேறுபாடுகளும் இன்றி இருப்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இவர் நவம்பர் 17, 1973 இல் புதுச்சேரியில் இறந்தார்.

அல்பாசாவின் கடந்த முப்பது ஆண்டுகால வாக்கையினை பதின்மூன்று தொகுதிகளாக தொகுத்து தெ அஜண்டா எனும் நூலை இவரைப் பின்பற்றுபவரான சாட்பிரேம் என்பவர் எழுதியுள்ளார்.

குழந்தைப் பருவம்

1885 இல் அல்பாசா

Related imageமிரா அல்பாசா 1878 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரத்தில் பிறந்தார். இவரின் தந்தை மோயிஸ் மாரிஸ் அல்பாசா. இவர் ஒரு துருக்கி யூதர் ஆவார். இவரின் தாய் எகிப்து யூதர் ஆவார். இவர் பிளான்சே ரச்சேல் மிரா அல்பாசா என அழைக்கப்பட்டார். இவருக்கு மேட்டொ மேத்தியூ முரிஸ் அல்பாசார் எனும் மூத்த சகோதரர் உள்ளார். இவர் பிறந்ததற்கு முந்தைய ஆண்டு இவரின் குடும்பம் பிரான்சுக்கு இடம் பெயர்ந்தனர். மிரா இசுலாமும் என்ற தனது பாட்டியுடன் அன்பாக இருந்தார். இவர் தான் எகிப்தை விட்டு வெளிநாடு சென்ற முதல் பெண்மனியாவார்.

தனது எழாவது வயதிலேயே வாசிக்கத் துவங்கினார். ஆனாலும் இவரின் ஒன்பதாவது வயதில் தான் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். இவர் கலை, டென்னிசு, பாடல் பாடுவது போன்ற பலவற்றில் ஆர்வம் செலுத்தினார். ஆனால் இவரது தாயார் இவர் எந்த ஒரு விடயங்களிலும் இவர் முழுமையாக கவனம் செலுத்துவதில்லை எனக் கவலையடைந்தார்.

தனது பதினான்காம் வயதில் ஒரு நல்ல வாசகராக ஆனார். தனது தந்தை சேகரித்து வைத்திருந்த அனைத்து நூல்களையும் படித்ததன் மூலம் பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றவரானார். இவருடைய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவரான விரேகம் என்பவர் ,

அல்பாசா தனது இளம்வயதில் அறிய இயலா இயக்கத்தில் அனுபவம் வாய்ந்தவராக இருந்தார் என்றும் ஆனால் இவரின் கல்வி தொடர்பாக அவர் போதுமானதாக அறிந்திருக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு 1893ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் உள்ள ஜுலியன் அகாதமி கலைப்பள்ளில் சேர்ந்தார்.  இவரது பாட்டி, ஹென்றி மோரிசெத் என்பவரை இவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். இவர் ஜுலியன் அகாதமியின் முன்னாள் மாணவர் ஆவார்.

ஹென்றியும், மிரா அல்பாசாவும் அக்டோபர் 13 1897 இல் திருமணம் செய்தனர்.இருவரும் இணைந்தே தங்களின் கலைப்பயணத்தை மேற்கொண்டனர்.

19ஆம் நூற்றாண்டுஉணர்வுப்பதிவுவாதம் யுகத்தில் இவர்கள் கலைஞர்களாக சுமார் பத்து ஆண்டுகள் பணிபுரிந்தனர். ஆகஸ்டு 23 ,1988 இல் இவர்களுக்கு ஆண்ரு எனும் குழந்தை பிறந்தது. அல்பாசாவின் படைப்புகள் 1903, 1904, 1905 ஆகிய ஆண்டுகளில் காட்சிப்படுத்தப்பட்டன. பகவத் கீதையின் பிரெஞ்சு மொழிப் பதிப்பை வாசிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Previous Post

தூங்குவது எப்படி

Next Post

Happy Birthday – The Mother

Next Post
Happy Birthday – The Mother

Happy Birthday - The Mother

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »