விசுவாமித்திரர் என்ற பெயரைக் கேட்டாலே தேவ அசுரர்கள் மிகவும் அஞ்சுவார்கள், காரணம்
மிகுந்த கோபக்காரர், தனது கடுமையான தவத்தால் பிரம்ம ரிஷியாக உயர்ந்தவர்.
அதுவும் சாதாரண பிரம்மரிஷி அல்ல ஆனானப்பட்ட வசிஷ்ட மாமுனிகள் வாயால்
பிரம்மரிஷி பட்டத்தை பெற்றவர்.
இந்தப் பட்டம் பெறுவதற்கு முன்னர் வசிஷ்ட மாமுனிக்கும் விசுவாமித்திரருக்கும் அடிக்கடி மோதல்கள் வெடிக்கும்.வசிஷ்டரிடமிருந்து காமதேனுவை பறிக்க முயன்ற காலம் முதல் நடந்த பல மோதல்கள்அரங்கேறியுள்ளது.
தனது முன்னோரின் நீத்தார் நினைவு நிகழ்ச்சிக்கு சாப்பிட வருமாறு
விசுவாமித்திரரை அழைத்தார் வசிஷ்டர். “அழைப்பை ஏற்பதில் சிரமம் இல்லை.
ஆனால் ஒரு நிபந்தனை. எனது உணவில் 1008 வகை காய்கறிகள் படைக்கப்பட வேண்டும்”என
நிபந்தனை ஒன்றை விதித்தார் விசுவாமித்திரர். இந்த பதிலால் குழப்பமும் கவலையும்
அடைந்தார் வசிஸ்டர். முதலில் 1008வகையான காய்கறிகள் உண்டா? அப்படியேஇருந்தாலும் இத்தனை கறிகாய்களை சமைத்துயாராவது உணவு படைக்க முடியுமா?
அப்படியே சமைத்துப்போட்டாலும் அதைச் சாப்பிட யாரால் முடியும்? ஒருவேளை நம்மை விசுவாமித்திரர் அவமதிக்க முயற்சிக்கிறாரா? இப்படி பலப் பல கேள்விகள் வசிஷ்டர் மனதில் தோன்றியது. ஆனாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் “சரி 1008 காய்கறிதானே எனது மனைவியான அருந்ததியிடம் சொல்லி உணவுக்கு ஏற்பாடு செய்கிறேன்.” என்றார்
வசிஷ்டர்.
குறிப்பிட்ட நாள் வந்தது வசிஸ்டரின் ஆஸ்ரத்திற்கு வந்தார் விசுவாமித்திரர். சிறிது
ஓய்விற்கு பின் விசுவாமித்திரரரை சாப்பிட அழைத்தார் வசிஸ்டர்.
சாப்பிட வந்த விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார். பாகற்காய்கறி, பலாப்பழம்,
பிரண்டைத் துவையல் இவைகளோடு, மேலும் எட்டு வகையான காய்கறிகள்
மட்டுமே இலையில் இருந்தன. 1008 காய்கறிகள் இல்லை.
கடும் சினமுற்ற விஸ்வாமித்திரர், “இதென்ன ஏமாற்று வேலை? 1008 வகை காய்கள் எங்கே?” என்று வசிஷ்டரிடம் ஆவேசப்பட்டார். வசிஷ்டரோ “நான் அருந்ததியிடம் 1008 காய்கறிகளுடன் தானே சமைக்க சொன்னேன். அவளையே இதைப் பற்றி கேளுங்கள்” என்றார்.
வசிஷ்டர் – விசுவாமித்திரர் இருவரது உரையாடலையும் கேட்ட கற்புக்கரசி அருந்ததி, தானே முன்வந்து… ஒரு ஸ்லோகத்தை கூறினால்.
“காரவல்லி ஸதம் சைவ
வஜ்ரவல்லி ஸதத்ரயம்
பனஸம் ஷட் ஸதம்சைவ
ஸ்ரார்த்தகாலே விதீயதே”
தெரிந்திருக்குமே!” என்றாள். விஸ்வாமித்திரர் வாயடைத்துப்போனார்.
பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்தி விட்டுப் போனார். அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம்
என்ன? மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருள்.
ஸ்ராத்தத் திதியன்று சமைக்கப்படும் சமையலில் சேர்க்கப்படும் காய்கறிகளில், பாகற்காய்கறி 100 காய்களுக்குச் சமம், பிரண்டைத் துவையல் 300 காய்களுக்குச்சமம், பலாப்பழம் 600 காய்களுக்குச் சமம் என்று பாடல் கூறுகிறது. ஆயிரம் காய்கள் ஆயிற்றா?
மீதிஇலையில் எண்ணிப்பாருங்கள், எட்டுகாய் கறிகள் வைத்திருக்கிறேன். ஆக மொத்தம் 1008!” என்றாள். சாஸ்த்திரப்படி விளக்கம்சொன்ன அருந்ததியின் ஸமயோசித புத்தியை பாராட்டினார் விஸ்வாமித்திரர்,
நீத்தார் நினைவு நாள் ஆசியுடன், விசுவாமித்திரரின் ஆசியும் பெற்ற அருந்ததியை வாழ்த்திவிட்டு சென்றார். இதன்பின் நீத்தார் நினைவு நாளின்போது இந்த 1008 காய்கறிகள் படைக்கும் வழக்கத்தை இன்றும் ஒருசிலர் கடைபிடித்து வருகின்றனர்.










