காமதேனு என்பது தேவ லோகத்தில் வசிக்கின்ற பசுவாகும்.
கேட்கின்ற பொருளை தருகின்ற சக்தி படைத்தாகும்
காமதேனுவை சுரபி என்றும்
அழைக்கின்றனர்.
அசுரர்களும், தேவர்களும்
பாற்கடலை கடையும் போது
பல்வேறு தெய்வங்கள்
தோன்றின.
கற்பக விருட்சம் போல
கேட்டதை தருகின்ற
காமதேனுவும் அப்போது
தோன்றியது.
காமதேனு –
பெண்ணின் தலையும்,
பசுவின் உடலும்,
மயில் தோகையும் இணைந்து
தோற்றமளிக்கிறது.
இந்த காமதேனு இந்திர உலகில் வசிப்பதாகும் .
சிவன், முருகன், விநாயகன், பெருமாள் ஆகியோருக்கு வாகனமாக காமதேனு உள்ளது.
காமதேனுக்கு உகந்த இந்த
ஸ்லோகத்தை கூறி கோபூஜை,
பிரதட்சிணம் செய்தால் எல்லா
பாக்கியங்களும் கிடைக்கும்.
“ஓம் சுபகாயை வித்மஹே
காமதாத்ரியை ச தீமஹி
தந்தோ தேனு: ப்ரசோதயாத்.”
பிரும்ம சிருஷ்டியில் உலகம்
உய்ய முதலில் பசுவைப்
படைத்து ,
அதன் உடலில் –
பதினான்கு உலகையும் ,
முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தார் என்று வேதங்கள் கூறுகின்றன.










