• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஆண்டிக்கோலத்தில் முருகனை வணங்க தயக்கமா? 

siddharbhoomi by siddharbhoomi
May 24, 2019
in ஆன்மிகம்
0
ஆண்டிக்கோலத்தில் முருகனை வணங்க தயக்கமா? 
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஆண்டிக்கோலத்தில் முருகனை வணங்க தயக்கமா? 

பழனி முருகன் கோயிலிற்குச் செல்பவர்கள், பொதுவாக இராஜ அலங்காரத்தையே பார்த்து வணங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏன்? அது சரியா?

முருகன் தனது பலவிதமான கோலங்களில் அழகாக காட்சி தந்தாலும், அவரது ஆண்டிக்கோலத்தை வணங்கிட பெரும்பாலான பக்தர்கள் யாரும் விரும்புவதில்லை.

இக்கோலத்தில் உள்ள முருகனை வணங்கினால் அவரைப்போல நாமும், பொருள், செல்வங்களை இழப்போம் என நம்பிக்கை
கொண்டுள்ளனர். இது தவறாகும்.

அறுபடை வீடுகளில் அவதாரங்களாக முருகன் உட்கார்ந்திருக்கிறார். அதில் முக்கியமான வீடு பழனி. இதுதான் நமக்கு அஞ்ஞானத்தை விலக்கி மெய்ஞானத்தை தூண்டக்கூடிய இடம். முருகன் ஏன் அந்தக் கோலத்தை பூணுகிறார்?

நீ ஒரு மெய்ஞானியாக இரு, ஓட்டாண்டியாக இரு என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. ஒன்றுமே இல்லாமல் சாம்பலைப் பூசிக்கொண்டு, கோவணத்தைக் கட்டிக்கொண்டு வந்து நில் என்றெல்லாம் அவர் அந்தக் கோலத்தில் உணர்த்தவில்லை.

தவறானவழியில்செல்வத்தைதேடாதே, பொருளைத்தேடாதே, அப்படி தேடினால் அது உனக்கு நிலைக்காது. பிறகு சங்கடங்களை அனுபவிப்பாய். எதுவுமே வேண்டாம் என்று நீ விட்டுவிட்டால் உன்னைத் தேடி எல்லாமே வரும் என்பதுதான் நிர்வாணக் கோலம்.

தண்டு கொண்டு கோவணத்துடன் நிற்கும் அந்தக் கோலம். இதுபோல விட்டுவிட்டால், ராஜவாக நீ இருப்பாய் என்பதை உணர்த்தத்தான் இராஜ அலங்காரம்.

அதனால் இந்த இரண்டு அலங்காரமுமே மிகவும் பிரதானம். அதனால், பழனிக்கு போய் முருகன் சாதாரணமாக இருந்ததைப் பார்த்தோம். அது சரியில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது. அதாவது பற்றற்று வாழ்தல், பற்றற்று என்றால் எதையுமே சாப்பிடாமல் இருப்பது என்பதெல்லாம் பொருளல்ல, சாப்பிடு, அளவாகச் சாப்பிடு. அதேநேரம் அறநெறியில் சம்பாதித்துச் சாப்பிடு.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரரை வணங்கி விட்டு வெளியே வந்ததும் பிரகாரத்தில் இருக்கும் ஆண்டி முருகனை பார்க்காமலேயே சிலர் சென்று விடுவர். இது தவறான செயல்.

தண்டபாணியின் இக்கோலம் மாயையான உலகில் இருக்கும் நாம் நமது ஆணவம், கர்வம் போன்றவற்றை துறந்து போலியில் பற்றின்றி வாழவேண்டும் என்பதையே உணர்த்துகிறது.

மேலும், எத்தனை வேண்டுதல்களைச் செய்து எவ்வளவு செல்வங்களைப் பெற்றாலும், பிணமாய் எரியும் போது எப்படி நிர்வாணமாய் வந்தோமோ அப்படி நிர்வாணமாகவே இறைவனை அடைவோம் என்பதையே ஆண்டிக்கோலம் காட்டுகிறது.

இதுதான் முருகன் பழனியில் உணர்த்தக்கூடிய ஐதீகம். அதனால் பழனி முருகனை எந்தக் கோலத்தில் பார்த்தாலும் நல்ல பலன்கள் உண்டு.

வேண்ட தக்கது அருள்வோய் நீ..!
வேண்ட முழுதும் தருவோய் நீ..!

Previous Post

பனைமரம் 

Next Post

கடலை பருப்பு சாப்பிட்டால்?

Next Post
கடலை பருப்பு சாப்பிட்டால்?

கடலை பருப்பு சாப்பிட்டால்?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

March 4, 2026
சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »