பாஸ்டன் அருகே GROTON குரோட்டான் என்னுமிடத்தில் உலகின் மிகப்பெரிய (இந்தியாவைத்த தவிர்த்து)
சாய்பாபா கோயில் உள்ளது. இக்கோவில் பாஸ்டனில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ளது. இக்கோவில் நியூ இங்கிலாந்து அருகே உள்ளது. இந்தியாவை தவிர்த்து உலகத்திலேயே மிகப்பெரிய சாய்பாபா கோயில் இதுதான். இந்த கோயில் 28 ஏக்கர் நிலப்பரப்பில்அமெரிக்காவில் பாஸ்டன் அருகே குரோட்டான் என்னுமிடத்தில் உள்ளது;
இக்கோவில் பாஸ்டனில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ளது .இந்த கோயில் உட்பகுதி 40 ,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது கோவிலின் வெளிப் பகுதியில் மூன்று கோபுரங்கள் தங்க நோரத்தில் கூம்பு வடிவில் உள்ளன. நடுவே உள்ள உயரமான கோபுரத்தின் உட்பகுதியில் சாய்பாபா சிலை உள்ளது.
கோவில் உட்பக்கம் என் கோண வடிவில் அமைந்துள்ளது கோவிலின் உட்பகுதிக்கு சூரிய ஒளி வருகிறார் போல் கட்டிடம் அமையப்பெற்றுள்ளது .கோவிலுக்குள் ஒரே சமயத்தில் 500 பேர் அமர்ந்து அனைத்து திசைகளிலிருந்தும் சாய்பாபாவை தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது . சாய் பா சிலை நடு நாயமாகவும் எட்டு கோணங்களில் ஒவ்வொரு கோணவடிவின் பகுதியிலும் பல சுவாமி சன்னதிகள் உள்ளன .
விநாயகர், சிவன், அம்பாள், ராமர் லட்சுமண,ர் வெங்கடாஜலபதி,விஷ்ணு, கிருஷ்ணர். நவக்கிரகங்கள் ஸ்ரீ தேவி. பூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் காண இடம் 2014 ஆம் ஆண்டு 1.8 மில்லியன் டாலரில் இந்திய ரூபாயில் 12 கோடியே 66 லட்சம் ரூபாய் ரூபாய்க்கு வாங்கி உள்ளனர்.
2014 ஆம் ஆண்டு தொடங்கி 10 மில்லியன் டாலருக்கு இந்திய ரூபாயில் 70 கோடியே 86 லட்சம் ரூபாயைக்கு கோயிலை கட்டி 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் குடமுழுக்கு நடத்தி உள்ளனர். 254 கார்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் இக்கோவில் சிறியதாக சேம்சபோர்ட பகுதியில் இருந்துள்ளது. பின்னர் இடம் வாங்கி பெரியதாகக் கட்டி தற்போதய வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.











