போகி
பொங்கலின் துவக்கமாக நாம் போகி பண்டிகையை கொண்டாடுகிறோம்.
போகி என்றாலே “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற தத்துவத்தை நம் முன்னோர்கள் விதைத்து சென்றுள்ளனர்.
வெறும் பழைய பொருட்களை மட்டும் எரிக்காமல் மன ரீதியாக வேறு சிலதையும் போகியன்று எரிப்பதே சிறந்தது.
பழங்காலத்தில் போகியன்று விடியற்காலையில் எழுந்து பழைய பாய், வேறு சில உபயோகமற்ற பொருட்கள், உடைந்த பானைகள் போன்றவற்றை வீட்டருகில் தீயிட்டுக் கொளுத்துவது வழக்கம்.
மேலும் பொங்கல் அன்று புதுப்பானை, புத்தரிசி என பல புதியவைகளோடு தை மாதத்தை பொங்கலிட்டு வரவேற்பது வழக்கம்.
மன ரீதியாக பார்த்தல் போகிக்குள் வேறு சில தத்துவங்களும் ஒளிந்துள்ளன.
நம்முடைய மனதில் எக்கச்சக்கமான கவலைகளையும், வெறுப்பு, பொறாமை என பல தீய எண்ணங்களையும் வைத்துக்கொண்டு வாழ்கிறோம்.
இவை அனைத்தையும் நம்முடைய மனதில் இருந்து எரித்துவிட்டு பொங்கல் முதல் புதிய மனிதனாக வாழவேண்டும் என்ற அற்புத தத்துவத்தையும் போகி உணர்த்துகிறது.
பாழ்பட்ட பொருட்களையும் பாழான மனதையும் போக்கி விட்டு புது மனிதனாய் புத்துணர்வோடு வாழ துவங்குவதே போகி பண்டிகையை கொண்டாடுவதன் நோக்கம்.
இதனாலேயே இதற்கு ‘போக்கி’ என்ற பெயர்வந்தது.
நாளடைவில் அந்த பெயரே மருவி போகி என்றானது.
அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு.











