ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் (இளையவர்)
ஸ்ரீலஸ்ரீ பொன்னம்பல சுவாமிகளின் மகன் சிவலிங்கத்திற்கு, சொர்ணம்மாள் தம்பதியருக்கு இளைய மகனாக ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் 08 .12 .1914 ஆம் ஆண்டு அவதரித்தார்.
தனது தாத்தாவே குருவாக ஏற்க வேண்டி மிகுந்த வைராகியத்துடன் அவரே தனக்கு தீட்சை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சதா அவரையே நினைத்து நினைத்து தியானம் செய்து வரும் பொழுது ஒரு நாள் கண்ணாடியில் தனது தாத்தாவான சித்த புருஷர் காட்சி தந்து ஆசி கூறினார். தாத்தாவின் வாழ்கை போலவே வாழ்ந்து வந்தார்.
அண்ணனின் கட்டாயத்தின் பேரில் சகுந்தலா அம்மையாரை மணந்து வாழ்ந்து வந்தார்.இவரும் தாத்தா போலவே பல சித்தாடல்கள் புரிந்துள்ளார். நண்பர் ஒருவர் செய்யும் பூஜை முறைகளை செம்பாக்கத்தில் இருந்தபடியே தொலைவிலுணர்தலின்படி உணர்ந்து பூஜை முறைகளை கூறுவார்.
ஒரு முறை ஆணவம் பிடித்த ஒரு சன்யாசி இவரை சோதிக்க எண்ணி, இவரின் வீட்டை அடைந்தார். ஆணவத்தின் உச்சிக்கே சென்று பேசினார். இளைய சுவாமிகளோ, தாகம் போக்க தண்ணீர் கொடுத்தார். நீரை கொப்பளித்து துப்பும் பொழுது, பற்களும் கொட்டியது.
சாமியாரின் ஆணவம் ஒடுங்கியது. திருப்போரூர் சாலையில் இரவில் மக்களை துன்புறுத்திய சிறுதெய்வத்தை சாந்தப்படுத்தியது, திருநீறு தந்து மக்கள் பிணிபோக்கியது, ஊரில் பூஜை செய்யும் பூஜகர் அரிசி இல்லாமல் வறுமையில் வாட.
சுவாமிகளோ அவரை வீட்டிற்கு அனுப்பி அரிசி பானையை திறக்க சொல்ல, அந்த பானையில் அரிசி நிறைந்து இருந்தது.
தாம் மண்ணுலக வாழ்கை முடியும் காலத்தை முன்பே உணர்ந்து சீடர்களிடம் கூறினார். அதுபோலவே 21.12.1976 அன்று இரவு நள்ளிரவு சுவாமிகளின் ஆத்மஜோதி சிவத்துடன் கலந்தது. அவரின் பூத உடல் பெரிய சுவாமிகள் சமாதி அருகில் புதைத்து நந்திபெருமானை பிரதிஷ்டை செய்தனர். மாழ்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் குருபூசை











