புதுச்சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் – இயற்றியவர் பாவேந்தர்.
(பூமியில் மானிட ஜென்மமடைந்து மோர்
புண்ணியமின்றி விலங்குகள் போல் – எனத் தொடங்கும் ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர் பாடிய பாடலின் மெட்டில் எழுதப்பெற்ற பாடல்)
☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!
தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?
செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!
=பாவேந்தர் பாரதிதாசன்
(இசையமுது தொகுதி – 1/பக்கம் – 34/1975 ஆண்டுப் பதிப்பு)
பாடல் விளக்கம்
தமிழரான நாங்கள்தான் மற்றோர் முன் உன் நிலையினை தாழ்த்திவிடுவோமோ ? நாங்களும் இப்பாரின் முன் தலை தந்திடுவோமோ ? பல இன்பம் ஒருங்கே தந்திடும் பைந்தமிழ் அன்னையே உன் புகழ் என் உயிர் உள்ளவரை மறப்பேனோ ?
செந்தமிழே ! என் உயிரே ! நறுந்தேனே !எனது செயல்களையும் மூச்சினையும் உனக்கு தந்துவிட்டேன் . நீ மடிவையெனில் நானும் உன்னுடன் சேர்த்தே மடிவேனே !! நீ உன்னிடம் அடைந்தால் நன்னிலை உனக்கு மட்டும் இல்லை எனக்கும் தான் !
முற்பிறப்பின் நினைவுகள் இன்றி இவுலகில் புதிதாய் பிறங்கும் மனிதயின் நெஞ்சில் சிவந்த தாமரைப் பூக்கள் பலவும் அடர்த்த காடாய் மலர்த்தது போல நினைவில் வளரும் என் தமிழ் ஒளியே நீ வாழ்க!










