அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், அய்யர்மலை.
திருவாட்போக்கி! (இருள் விளக்க விளக்கு எற்றுவீர்!)
கூற்றம் வந்து குமைத்திடும் போதினால்
தேற்றம் வந்து தெளிவுற லாகுமே
ஆற்ற வும்மருள் செய்யும்வாட் போக்கிபால்
ஏற்று மின்விளக் கையிருள் நீங்கவே.– பாடியவர்:திருநாவுக்கரசர்
பொருள்:
எமன் வந்து அழித்திடும்போதில் முடிவு வந்து தெளிவுறல் ஆகாதன்றோ ? மிகவும் அருள்செய்யும் வாட்போக்கி இறைவர்பால் விளக்கை இருள் நீங்க ஏற்றுவீராக.
திருக்கோயில் – அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், அய்யர்மலை.











