ஶ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் வாழ்க்கைச் சுருக்கம்
அவதாரம் : பாரத நாட்டின் இராமநாதபுரம்.
தாய் : பெயர் தெரியாது.
தந்தை : பெயர் தெரியாது. (இராமநாதபுரத்து பொருநாளிராச்சியத்தின் சிற்றரசன்.)
இளமை பெயர் : கோவிந்த சாமி.
துறவரம் பூண்டமை : பெருநாளிராச்சியத்தில் ஏற்பட்ட பயங்கரமான மரண கொள்ளை நோய் பரவுவதை கண்ணுற்று மனதில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக துறவறத்தினை நாடினார்.
வழிகாட்டியவர்கள் : நவநாத சித்தர், பெரியானைக்குட்டி சுவாமி – 1920 ஆம் ஆண்டுக்கு முற்பகுதியில் தூத்துக்குடியிலிருந்து கொழும்புத்துறை முகத்தினை அடைந்தார்.
நடமாடிய இடங்கள் :
கொழும்பு செட்டியார் தெரு, யாழ்ப்பாணம், அநுராதபுரம், மன்னார், திருகோணமலை, ஏறாவூர், மட்டக்களப்பு, கன்னங்கடா, களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு, மண்டூர், கல்முனை,
வீரமுனை, அகக்ரைப்பறறு; , கோளாவில், பனங்காடு, திருக்கோவில், உகந்தை, திசமகரம, கதிர்காமம் முதலிய இன்னும் பல இடங்களில் நடமாடியுள்ளார்கள்.
நாளாநத் நடை உடை :
முழங்காலுக்கு மேல் வெட்டி கட்டியிருப்பார். பச்சை கம்பாயதால் போர்த்தி சிலவேளை
கேலி பண்ணுவதற்குரியாவராக தனது
செய்கைகளையும், கோலங்களையும் மாற்றிக்கொண்டு நடமாடினார்
மக்களை வழிநடத்தியதன்மை:
அருளுரைகள், அற்புதங்கள் மூலம் உள்ளன்புடன் தன்னை நாடிவரும் அன்பர்களின்
மனோநிலைக்கு ஏற்ப மற்றவர்களின் துன்பதுயரங்களை தாமே ஏற்றும் அனுபவித்தும் வந்தார்.
ஆடிய சித்துக்களிற் சில:
- கல்முனைச் சந்தியில் நின்று கதிர்காமத்தில் தீப்பிடித்த திரைச் சீலையை அணைத்தவர்
- மக்களின் கண்நோய் தீர்த்த கருணையாளர்
- உடைந்த சாராயப்பீப்பா அடைபட்ட அதிசயம்
- பைத்தியத்தை மாற்றிய பக்குவம்
- ஒரே நேரத்தில் இருநிலை காட்டியமை
- இறந்த பெண் மீண்டும் உயிர் பெற்றமை
- கதிர்காமத் திருவிழாவினை தனது உள்ளங்கையில் காண்பித்த மகான்
- கடலின் மேலால் நடந்தமை
- சாண்டோ சங்கரதாஸை இரும்பரசனாக புகழ் பூக்கச் செய்தமை.
விபுலானந்தருடனான தொடர்பு:
விபுலானந்த அடிகளார் நோய் வாய்ப்பட்டிருந்த வேளை சுவாமிகள் பக்கத்தே
அமர்ந்திருந்து உடபெல்லாம் வருடி நோய் இருந்த இடம் தெரியாது அகற்றியதும்
சுவாமி வேடம் பூண்டாலும் நான் என்ற அகந்தை நீங்காவிட்டால் யாதும் பயனில்லை
என்பதை விளக்கவே சித்தானை அடிகளாருடன் நாயைக் கட்டாதவன் என்னடா சாமி
என்ற சித்தாடலை நடத்திக் காட்டப்பட்டது.
ஜீவசமாதி வைக்கப்பட்ட இடம்:
மட்டுமாநகரின் கண்ணாய் மிளிர்கின்ற காரேறு மூதூர் எனும் காரைதீவு 03ஆம்
குறிச்சியில் சித்தானைக்குட்டி புரத்தில் ஜீவசமாதி வைக்கப்பட்டது.
சிவபதமடைந்த நாள்:
1951 ஆம் ஆண்டு தமிழுக்கு ஆடித்திங்கள் சுவாதி நட்சத்திர தினம்.
சித்தானைக்குட்டி சுவாமிகளும்:
சித்தர் புத்தியைக் கட்டுப்படுத்தியவர். சித்தம் என்பது புத்தி மனம். சித்து புத்தியால்
ஆகிய காரியம் சித்தர்கள் யோகத்தின் மூலமும் தியானத்தின் மூலமும் புத்தியை
கட்டுப்படுத்துவார்கள். சித்தர்களை ஆன்மீக புரட்சியாளர்கள் என்று சொல்வதும் உண்டு.
இத்தகைய சித்தர்கள் பொதுவாக தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் வாழ்ந்துள்ளனர் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்து பல சித்துகளை வெளிப்படுத்தி
மகா சமாதியுற்ற ஞான சித்தர்கள் ஜவர் இவர்கள் 1920 ஆம் ஆண்டு முற்பகுதியில் இலங்கையை வந்தடைந்நதாக கூறப்படுகின்றது இவர்களில்
ஒருவரே சித்தானைக்குட்டி சுவாமிகள் காரைதீவிலே 1951 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 21ஆம் நாள் சுவாதி நட்சத்திர தினத்தன்று சமாதி எய்தினார்.
இத்தகைய ஈழத்துச் சித்தர்களுள் ஒருவரான சித்தானைக்குட்டி சுவாமிகள் சமூகச் செந்நெறிக்காக எவ்வாறான சிந்தனைகளை முன்வைத்துள்ளார் என்பதை நோக்குவது அவசியமாகும்.
மனிதர்கள் பணம் உழைக்கும் இயந்திரங்களாக மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையில் அகவாழ்வின் உன்னதத்தை உணர்ந்தவர்கள் எவரும் இல்லை.
மனிதர்கள் தங்கள் உடலியல் தேவைகளை முன்னிறுத்தி உள்ளத்தின் தேவைகளை பிற தேவைகளின் நிர்ப்பந்தங்களால் பிணைத்து சமாதானப்பட்டுக் கொள்ளும் சூழ்நிலையில் தான் நாம் வாழந்து வருகிறோம்.
புறத்தேவைகள் நிலையில்லாதவை அவை புறந்தள்ளப்பட வேண்டியவை. அகத்தேவைகளை முன்னிறுத்தி முழுமையடையச் செய்வதன் மூலம் ஒரு மனிதன் தன் நிலையை உணர்ந்து பூரணமடைவான் என்பதனை சித்தானைக்குட்டி சுவாமிகளின்
வாழ்வும் வாக்கும் புலப்படுத்தி நிற்கின்றன. சித்தானைக்குட்டி சுவாமிகள் நிலையாமையை உணர்ந்தவராய் சமூக நோக்கு கொண்டவராய் சமூகத்தில் வாழ்ந்தவர் இவர் சமூக செந்நெறிக்கான பல படிப்பபினைகளை தனது வாழ்க்கைச் சம்பவங்கள், உபதேசங்கள் அற்புதங்கள் வாயிலாக சமூகத்திற்கு விளக்கியுள்ளார்.
இந்து மதத்தில் நிலையாமை என்பது ஒரு முக்கியமான எண்ணக்கருவாகும். இதனை சித்தானைக்குட்டி சுவாமியும் ஏனைய பல சித்தர்களும் பல்வேறு கருத்துக்கள்
சம்பாஷனைகள் வாயிலாக முன்வைத்தார்கள். குணங்குடிச் சித்தர், திருவள்ளுவர்,
திருமூலர், அழுக்கணிச்சித்தர், கடுவெளிச்சித்தர் ஆகியோர் பல பாடல்கள் வாயிலாக
தெளிவாக கூறியுள்ளனர்.
“நீரின் மேல் குமிழி போல் உடம்பு இது நில்லாது
போய்விடும் இது நீயறியா மாயம்”
என்று உடலின் நிலையாமை பற்றி பாடியுள்ளார்.











