என் அன்புக்குழந்தையே, – அன்னையின் பதில்
இந்தச் சூழலில் நீ மட்டுமல்ல.( என்னிடம் பற்றுவைத்திருக்கும் அருமையானவர்களின் மத்தியில்) இன்னும் எத்தனையோ பேர் இருக்கின்றனர்.
அவர்களும் சத்தியத்திற்கு எதிரான சக்திகள் போரிடும் களமாக இருக்கின்றனர்.
அவர்களும் இந்தப் போர்க்களத்தில், கவலை கொண்ட பார்வையாளர்களாக-சக்தியற்றவர்களாக- பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஏனெனில்,
அது அதியுணர்வு சக்திகளின் செயல்பாடுகள் முழுமையாக இல்லாத ஸ்தூல உணர்வுப் பிரதேசத்தில் ஏற்படுகிறது. ஆனால்,
அவை வெகு விரைவிலேயே முழுமையாக செயல்படும் எனும் நம்பிக்கை என்னிடம் இருக்கிறது.
அதுவரையில், பொறுமையாகவும், சங்கடங்களையெல்லாம் அனுப்பித்துக்கொண்டு விடுதலையடையும் வேளைக்குக் காத்திருப்பதுதான் உத்தமம்.
உன்னுடைய வேண்டுதலை நான் படிக்கும்போது அது கேட்கப்படவேண்டுமென நானும் வேண்டிக்கொள்கிறேன்.
என்னுடைய ஆசிர்வாதங்கள்,
கையொப்பம்: அன்னை
ஜூன்11, 1955.











