பைரவ சித்தர் கோவில் 128 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நவகண்ட யோகிகளில் பைரவ சித்தரும் ஒருவர்.பல அற்புத சித்துக்கள் செய்தவர் இவர்.
சித்து, சித்தம் என்றால் மாய, மந்திர தந்திரங்கள் மற்றும் ஆன்மா. அறிவு என்று பல அர்த்தங்கள் இருக்கிறது.
மனநிலை சரியில்லாதவர்களை சித்த ஸ்வாதீனம் இல்லாதவர்கள் என்று சொல்வோம். சித்து என்றால் அறிவு. அதன் எதிர்பதம் பித்து.
சித்தத்தை சிவன்பால் வைத்து. இது பொதுவாக சிவபக்தர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை.இந்த பைரவ சித்தர் யார்? எங்கிருந்து? வந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை.
ஆனால் இவர்ஒரு பெரிய பைரவ உபாசகர். சாட்ஷாத் அந்த பைரவரின் அம்சம் என்றும் சிலர் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். இவரை சுற்றி எப்பொழுதும் ஒரு நாய் கூட்டம் இருக்கும்.
இவர் நவகண்ட யோகத்தில் இருக்கும் பொழுது உடல் 9 துண்டுகளாக இருக்கும். அந்த நேரத்தில் யாரும் இவரை நெருங்காது நாயகள் மன்னிக்கவும் பைரவர்கள் காவல் காப்பார்கள்.
பிரச்சனைகளில் இருந்து விடுபட, எதிரிகள் தொல்லைகள் அழிய, நோய் நொடிகள் தீர, செல்வம் பெருக என அனைத்திற்குமே பைரவ வழிபாடு மிக சிறந்தது. சிவபெருமானின் 64 வடிவங்களில் பைரவ வடிவம் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.
சமீப காலமாக வறுமையை நீக்கி, வளமையை தரும் ஸ்வர்ணாகர்ஷண பைரவ வழிபாடு மிக பிரபலம் அடைந்து கொண்டு வருகிறது. ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன் பூவிருந்தவல்லிக்கு வந்த பைரவ சித்தர்.
ஸ்வர்ணாகர்ஷண பைரவரின் உருவாக திகழ்ந்து பலரின் வறுமை நீக்கி வளமையை தந்து இருக்கிறார். பலரது தீரா பிணிகளை நீக்கி இருக்கிறார். பலர் துன்பங்களை போக்கி இருக்கிறார்.
இன்றும் அவற்றை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்.பல சித்து வேலைகளை புரிந்த, பலரின் காரியங்களை சித்தி அடைய செய்த பைரவ சித்தர்.
சுமார் 128 ஆண்டுகளுக்கு முன். அதாவது 1888 ம் ஆண்டு மாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.
ஆங்கில தேதி22/2/1888. இவரின் கோவில் பார்க்க மிக, மிக எளிமையான தோற்றத்தில் இருக்கும். வெளியில் இருந்து பார்க்க ஒரு வீடு போன்ற தோற்றத்தில் இருக்கும்.இவர் கோவிலுக்கு பின் வீடும் இருக்கிறது.
மந்திர, தந்திர பிரயோகங்கள், பைரவ வழிபாடு முதலான அனைத்திற்கும் ரோகிணி நட்சத்திரம் மிக, மிக சிறந்தது. கிருஷ்ண பரமாத்மா அவதரித்த நட்சத்திரம் ரோகிணி.
பூந்தமல்லி பஸ் ஸ்டான்டிற்கு எதிரே இருக்கும் நீதியரசர் செல்லப்பா தெருவின் உள் வர வேண்டும். அந்த தெருவில் மூன்றாவது வலதுதெருவில் திரும்பி இரண்டாவது வலது தெருவில் திரும்பினாள்ராஜா அக்ரகாரம் தெரு வரும்.
ராஜா அக்ரகாரம் முதல் குறுக்கு தெரு, இரண்டாம் குறுக்கு தெரு என்று சின்ன, சின்னதாக தெருக்கள் இருக்கும். ராஜா அக்ரகாரம் மெயின் ரோட்டிற்கு வர வேண்டும்.
ராஜா அக்ரகாரம் மெயின் ரோட்டில் இடது பக்கம் ஒரு காலி கிரௌண்ட் இருக்கும். அதில் ஓடாத, பழுதடைந்த சில வண்டிகள் இருக்கும்.
அந்த காலி கிரௌண்ட்டை ஒட்டி பைரவ சித்தர் உயிர்நிலை கோவில் இருக்கிறது.













