கர்மா-நேரடியாக இறைவனே கவனிக்கிறான்.!
கர்மா பொல்லாதது, அதை வெல்ல யாராலும் முடியாதது.
இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன்.
விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தையே அடக்கி ஆள முயல்கிறார்கள்,
ஆனால்
பூமி இன்று உலகத்தையே முடக்கி நாளுக்கு நாள் மனித வாழ்வுக்கு உகந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறது.
கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையாற்றுவது இல்லை.
உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்றத் தவறுவதே இல்லை.
உங்கள் செயல்களுக்கான பலனை ஏதோ ஒரு வடிவில் உங்களிடமே சேர்த்து விடும் மிகச்சிறந்த நிர்வாகிதான் கர்மா.
யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது.
கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வருகிறது என்பதை புரிந்து கொள்வோம்.
கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில்,
நன்மையை மட்டுமே விதைப்போம்,
நல்லவர்களாக வாழ்வோம்.
கெட்டவன் தானே தன் அழிவை தேடிக் கொள்கிறான். அவனோடு உங்களை கொஞ்சம் கூட ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்.
“பாவமன்னிப்பு” என்ற மதச்சடங்கு, இந்து மதத்தில் இல்லாதது ஏன் தெரியுமா?
பாவங்கள் மன்னிக்கப்படுமானால், பாவிகள், தைரியசாலிகள் ஆகிவிடுவர்.
இந்துமதம் பாவத்தின் அளவுக்கு தண்டனையை விதிக்கிறது பாவம் உணரப்படும் போது, குறைந்தபட்ச தண்டனை கொடுத்து மன்னிக்கிறது. ஆனால்,
அப்படி ஒரு மன்னிப்பை வழங்குவதற்கு இங்கே யாரையும் நியமிக்கவில்லை.
இந்த விஷயங்களை நேரடியாக இறைவனே கவனிக்கிறான்.!
உணர்ந்தவன் பாக்கியசாலி, கட்டுப்பட்டவன் புத்திசாலி.











