உனக்கு ஏதேனும் பலன் உண்டா?
பட்டினத்தார் இறைவனிடம் ஒரு கேள்வி
கேட்கிறார். ” ஆண்டவா! தங்கம் வைத்திருப்
பவர்களுக்கு அந்தத் தங்கத்தினால் கொஞ்சம்
பிரயோஜனம் உண்டு. ஆனால், அவர்களால்
தங்கத்துக்குப் பிரயோஜனம் உண்டா?
அதுபோல, நீ அருள் மழை பொழிவதால், என்னைப் போன்றவர்களுக்கு நல்ல பலன்
உண்டு. ஆனால், என்னைப் போன்றவர்களால் உனக்கு ஏதேனும் பலன் உண்டா? ”
திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகரோ சிவபெருமானைக் கிண்டலே செய்கிறார்.
” இதோ பார். சல்லிக்காசுக்குப் பிரயோஜன
மில்லாத என்னை நான் உனக்குத் தந்தேன்.
என்னை நீ ஏற்றுக் கொண்டு, உன்னையே
எனக்குத் தந்துவிட்டாயே. யார் புத்திசாலி?
நீயே சொல். ” என சிவபெருமானையே
நக்கல் செய்கிறார்.
ஆதி சங்கரரோ வேறுபாணியில் இக் கருத்தைத் தெரிவிக்கிறார்.
” நீயோ சூரியன் சந்திரன் முதலிய எல்லா
ஜோதிகளுக்கும் ஔியூட்டுபவள். பார்!
உன்னை ஒரு தீவாரதனை என்னும் சிறிய
தீபத்தைக் காட்டி திருப்தி செய்கிறேன். ”
இறைத் தொண்டர்கள் தங்களால் இறைக்கு
ஏதேனும் பயன் உண்டா எனக் கேட்கிறார்கள்.
நம்மால் மற்றவர்களுக்கு ஏதேனும் பயன்
இருக்கிறதா என சிந்திக்கிறோமா?











