கர்மவினைகளை ஒருவன் அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டுமா? என பரந்தாமனிடம் கேட்கும் எளிய பக்தனின் கதை 🌹🌺
🌺விசித்திரபுரம் என்ற ஊரில் ஞானசித்தன் என்ற ஏழை
விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த ஸ்ரீ கிருஷ்ண பக்திமானாக இருந்தபோதிலும் அவனுக்கு வாய்த்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது
வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.
🌺வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை இறை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான்.
🌺எந்த அளவிற்கு அவன்
பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த
அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து
கொண்டன.
🌺அதே ஊரில் அவனுக்கு குமணவித்தன் என்ற சூழ்ச்சி
குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான்.
🌺தனது இன்பத்திற்காக எந்த ஒரு
கொடுமையான செயலையும்
குணமுடையவனாக அவனிருந்தான்.
அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.
🌺இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு தன் நண்பன்
ஞானசித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை.
இதன் காரணமாக ஒரு கட்டத்தில்
இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.
🌺கோபத்தில் வெகுண்டெழுந்த ஞானசித்தன் ஸ்ரீ கிருஷ்ணன்
மீது தனது பக்தி உண்மையாயிருந்தால்
இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய்
என்று சாபமிட தொடங்கினான்.
🌺சிரித்துக்
கொண்ட குமணவித்தன் அப்படி நடக்கவில்லை
என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும்
என்ற சவாலுக்கு இழுத்தான். இதற்கு
ஒப்புக்கொண்ட ஞானசித்தன் தீவிரமான
பிராத்தனையில் ஈடுபட்டான்.
🌺போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில்
குமணவித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு அதிகமான பறவைகளையும்
விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான்.
🌺வரும்வழியில் களைப்பு
தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான்.
🌺கணக்கிட முடியாத
செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை
பார்த்து, அதையும் மூட்டையாக
கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன் வீடு திரும்பினான்.
🌺இதற்கிடையே வயலில்
வேலை செய்துகொண்டிருந்த
ஞானசித்தனை மாடுமுட்டி கடுமையான காயங்களுடன்
படுத்தபடுக்கை ஆகி விட்டான்.
🌺இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது அசிங்கம் என்று ஞானசித்தனின் மனைவி
அவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு
நொடியும் அழுதே தீர்த்தான்.
🌺தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான் ஞானசித்தன். உடல்
ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்துகொள்ள முடியவில்லை.
🌺எப்படியோ எழுந்து
தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில் குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான்.
🌺ஆம் எந்த ஸ்ரீ கிருஷ்ணனை அவன் பக்தியுடன் அனுதினமும்
வணங்கினானோ அதே பரந்தாமன் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தார்.
🌺உடலாலும் மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு அவரை வணங்க
தோனவில்லை, மாறாக பரந்தாமனிடம் சண்டை போட
தொடங்கினான்.
🌺தனது ஆதங்கத்தையும்
ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.
அனைத்தையும் பொறுமையுடன்
கேட்டுகொண்டிருந்த பரந்தாமன்
அவனை தன்னோடு அனைத்து கொண்டார். பரந்தாமனின்
அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் ஞானசித்தன்.
🌺இப்பொழுது பரந்தாமன் பேச
தொடங்கினார், ஞானசித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில்
வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய்.
🌺நீ உன் மனைவியை மதித்தது கூட
கிடையாது. மாறாக உன் நண்பன் குமணவித்தனோ முன்பிறவியில்
நல்ல காரியங்களையே செய்து வந்தான், அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ
செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.
🌺என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ
அனுபவிக்க வேண்டிய கர்மத்தின்
பெரும்பாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,
மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே
அனுபவிக்கின்றாய்.
🌺ஆன்மீகத்தை தொடங்கும்
ஒருவன் முதலில் அவனது பாவ பதிவையே அனுபவிக்க தொடங்குகிறான், மாறாக
அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்தபின்பு தான்
அவன் பாவ பதிவுகள் செயல்பட தொடங்கும்.
🌺உன் நண்பனுக்கு கிடைத்த புதையலே அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.
அவன் செய்த அனைத்து புண்ணியங்களும்
ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு
புதையலாக கிடைத்தது.
🌺இதுவரை நீ
அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. இனி
நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து
தெரிந்து கொள் என்று சில
அறிவுரைகளையும் கூறி மறைந்தார் பரந்தாமன்.
🌺நாட்கள் செல்ல செல்ல ஞானசித்தனின் உடல்நிலை
நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது
சொத்துக்கள் அனைத்தும் ஞானசித்தனுக்கு
கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும்
சித்தனுக்கு அமைந்தாள்.
🌺அதே சமயத்தில்
குமணவித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன்
கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன் சொத்துக்கள் அனைத்தையும்
பறித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.
🌺தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய ஞானசித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே
தங்க செய்து உதவினான்.
🌺ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவது. அது நல்லதாக இருந்தால் நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.
🌺ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க விதிவிலக்குகளும் உண்டு. அதுதான்” இறைபக்தி” நம் இறைபக்தி நம்மை அனைத்து வினைகளிலிருந்தும் நம்மை விலக்கும், பரந்தாமனை நோக்கிய நமது பிரார்த்தனை நம்மை பகவானை நோக்கி மேம்படுத்தும்🌹🌺











