கைக்குள் பிடித்த கடலளவுச் செய்திகள் மெய்க்குள் இருக்கும் மெய்யறிவைத் தூண்டிப் பொய்க்குள் புகுந்திடாப் பொருண்மை ஈந்தே நெய்திடும் பட்டென நேர்த்தி தந்திடும் !
நதியாய் நகர்ந்த நாகரீகப் புனைவுடன் புவியின் காலத்தைப் புதைத்த கதைகளும் உயிராய் உதிரமாய் உதிர்ந்தும் உதிரா உணர்வுடன் மானுடம் பனுவலாய்ப் பகிர்ந்திடும் !
ஆக்கிய அத்தனை அறிவுடை நூல்களை ஆற்றலைச் சேர்த்திடும் ஆர்வமாய்ப் பருகிடப் போர்க்கள வாழ்வையும் புத்துணர்வு ஆக்கியே பூலோகம் முழுவதும் வெற்றியை நாட்டிடும் !











