இந்த ஒரு டீயை குடித்து வந்தால் போதும்.
உங்கள் அழகும் அற்புதமாகும், உங்கள் ஆயுளும் இரட்டிப்பாகும்.
ஒரு சிலருக்கு காலையில் டீ குடிக்காவிட்டால் அன்றைய பொழுது எந்த வேலையையும் அவர்களால் திருப்தியாக செய்ய முடியாது. எனவே காலையில் முதலில் டீ குடித்த பின்னர் தான் பலரும் தங்கள் அன்றாட வேலையை துவங்குகிறார்கள்.
ஆனால் இப்படி நாம் குடிக்கும் டீ நமது உடம்பிற்கு ஆரோக்கிய பிரச்சனைகளை மட்டுமே கொடுக்கிறது. முடிந்தவரை இவற்றை தவிர்த்து கொள்வதோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்வதோ தான் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை ஆகும்.
ஆனால் ஆவாரம்பூ சேர்த்து செய்யும் இந்த டீயை குடித்து வந்தால் நீங்கள் அழகாகவும் மாறலாம், உங்கள் ஆயுளும் அதிகரிக்கும். அப்படி இதில் என்னதான் இருக்கிறது என்று கேட்டால், ஆவாரம்பூ பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
சருமப் பிரச்சனை, வயிற்றுப் பிரச்சனை, அழகு சம்மந்தமான பிரச்சனை போன்று அனைத்திற்கும் தீர்வாக அமைகிறது. வாருங்கள் இந்த ஆவாரம் பூ டீ யை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஆவாரம்பூ டீ செய்ய தேவையான பொருட்கள்:
காய வைத்த ஆவாரம் பூ – ஒரு கைப்பிடி, தண்ணீர் – ஒன்றரை லிட்டர், நாட்டுச் சர்க்கரை – 3 ஸ்பூன்.
ஆவாரம் பூ டீ செய்முறை:
முதலில் ஒன்றரை லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது இந்த பாத்திரத்தை வைத்து, தண்ணீரை சூடு படுத்த வேண்டும். தண்ணீர் நன்றாக சூடானதும் அதில் ஒரு கைப்பிடி காய்ந்த ஆவாரம்பூவை சேர்க்க வேண்டும்.
இவை இரண்டும் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து விடவேண்டும். இதில் சேர்த்துள்ள ஒன்றரை லிட்டர் தண்ணீர், ஒரு லிட்டர் தண்ணீர் ஆகும்வரை நன்றாக கொதிக்கவிட வேண்டும். பிறகு இவற்றை ஒரு வடிகட்டி வைத்துக் வடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை சிறிது நேரத்திற்கு ஆறவிட வேண்டும்.
பிறகு இதனுடன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து அனைவருக்கும் பருகலாம். இவற்றை குடிப்பதன் மூலம் நமது ஆரோக்கியமும் பலப்படும், அழகும் அதிகரிக்கும். எந்த வித சரும பிரச்சனைகள் இருந்தாலும் அவை படிப்படியாக குணமாகும்.
ஆவாரம் பூ பயன்கள்:
பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது மலச்சிக்கல் தான். இந்த மலச்சிக்கலினால் தான் பலவித நோய்கள் உடம்பில் ஒட்டிக் கொள்கின்றன. எனவே மலச்சிக்கலை சரிசெய்ய தினமும் இரண்டு வேளை இந்த ஆவாரம்பூ டீ குடித்து வந்தால் போதும், உடனே சரியாகிவிடும்.
வயிற்றுப்புண் குணமாகும், சிறுநீர் பிரச்சனைகள் சரியாகும், காய்ச்சல் குணமாகும், சருமம் அழகு பெறும், உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும், பித்தம், நீர்க்கடுப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் அனைத்தையும் இந்த ஆவாரம் பூ டீ ஒன்று மட்டுமே சரிசெய்துவிடும்.











