நாளை ஆடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை. வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால், குடும்பம் சுபிட்சம் பெறும். அம்பாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
ஆடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையானது நாளைய தினம் வரவிருக்கின்றது. கடந்த ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில்,
அம்பாள் வழிபாட்டை தவறவிட்டவர்கள், கூழ் வார்த்தல் வழிபாட்டை செய்யாதவர்கள், எல்லாம் நாளைய தினம் வரக்கூடிய
ஞாயிற்றுக்கிழமை நாளை தவிர விடாதிங்க.
🔱
ஆடி மாதம் அம்பாள் வழிபாட்டோடு சேர்த்து நாளைய தினம் கன்னி தெய்வங்களையும் வழிபாடு செய்தால், குடும்பத்தில் இருக்கும்
சுப காரிய தடை விளக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வழிபாடுகளையும் எப்படி செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
🔱
ஆடி ஞாயிறு கூழ் வார்த்தல் வழிபாடு
இந்த வழிபாட்டிற்கு நீங்கள் உங்கள் கைகளால் வீட்டில் கூழ் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய கூழில் குளிர்ந்த தயிர், சின்ன வெங்காயம்
எல்லாம் சேர்த்து அந்த கூழ் பானைக்கு வேப்பிலை கட்டி வீட்டில் இருக்கும் மாரியம்மன் திருவுருவப்படத்திற்கு முன்பாக வைத்து
வழிபாடு செய்யலாம்.
அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு இந்த கூழ் எடுத்துச் சென்று, அம்பாள்
முன்பாக வைத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, இந்தக் கூழை இயலாதவர்களுக்கு தானமாக கொடுப்பது மிக மிக
நல்லது.
🔱
இந்த ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை கூழ் செய்து பசியோடு இருப்பவர்களுக்கு தானம் கொடுத்தால் உங்களுடைய வீட்டில்
இருப்பவர்களின் ஆரோக்கியம் மேம்படும். குடும்பம் சுபிட்சம் பெறும்.
வீட்டில் தன தானியத்திற்கு என்றுமே பஞ்சம் வராது. அந்த அம்பாளின் அருள் ஆசி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்பது
நம்பிக்கை.
🔱
சில பேர் வீடுகளில் இந்த கூழ் வார்த்தல் பண்டிகை மிக விமர்சையாக நடைபெறும். முருங்கைக்கீரை பொரியல், குழம்பு
கத்தரிக்காய் கூட்டு, சாதம் சமைத்து, பிடி கொழுக்கட்டை எல்லாம் செய்து, வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
🔱
ஆடி ஞாயிறு குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ளலாம். உங்களுடைய குலதெய்வம் அம்மனாக இருந்தால் அந்த அம்மன்
கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து உங்கள் குல வழக்கப்படி அம்பாளை வழிபாடு செய்த நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.
🔱
ஆடி ஞாயிறு கன்னி தெய்வ வழிபாடு
உங்களுடைய குடும்பத்தில் வாழ்ந்த ஒரு பெண், கன்னி பெண்ணாக இருக்கும் போது இறந்திருந்தால், அவர்களை நினைத்து
கட்டாயம் ஆடி மாதத்தில் ஒரு நாள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இதை தான் கன்னி தெய்வ வழிபாடு என்று
சொல்லுவார்கள்.
உங்களுடைய குடும்பத்தில் இதுபோல யாராவது இறந்து விட்டார்கள் என்று உங்களுடைய தாய் தந்தையர் உங்களுக்கு சொல்லி
இருந்தால், உங்களுடைய முன்னோர்கள் உங்களுக்கு சொல்லி இருந்தால், அந்த நபரை நினைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி
வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
🔱
சிறுவயதிலேயே உயிரிழந்தவர்களுக்கு, ஒரு பாவாடை சட்டை, ரிப்பன், பொட்டு, மஞ்சள் குங்குமம், வளையல் போன்ற பொருட்களை
எல்லாம் வாங்கி ஒரு தாம்பல தட்டில் அடுக்கி பூஜை அறையில் வைத்து விளக்கேற்றி வைத்துவிட்டு, மறைந்த அந்த கன்னி
தெய்வத்தை நினைத்து வழிபாடு செய்தால் நம்முடைய அடுத்த தலைமுறை நன்றாக இருக்கும் என்பதை நம்பிக்கை.
🔱
வீட்டில் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் வீட்டில் திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப் பெண்ணுக்கு திருமணம் நடக்கும்.
திருமணம் ஆகாத ஆண்களுக்கும் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அது மட்டும் அல்லாமல் குழந்தை பாக்கியம் இன்றி
காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இத்தனை சக்திகள் வாய்ந்த வழிபாட்டை நீங்கள் இந்த ஆடி ஞாயிற்றுக்கிழமை அன்று செய்வது மிக மிக சிறப்பு. ஆடி மாதம்
முழுவதும் நீங்கள் அம்பாள் வழிபாடு செய்யவில்லை, கன்னி தெய்வத்தை வழிபட செய்யவில்லை, குலதெய்வத்தை வழிபாடு
செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.
🔱
இப்படி உங்களுடைய குடும்பத்தில் சிறுவயதில் யாரும் இருக்கவில்லை, எங்களுக்கு தெரியாது என்றால், இந்த நாளில் நீங்கள் பால
திரிபுரசுந்தரி நினைத்து, கன்னி தெய்வ வழிபாடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் உங்களுக்கு ஒரு வாய்ப்பு
இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயம் குடும்பத்தில் நல்லது நடக்கும்.










