முன்னூர் அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் திருக்கோயி லில் ஐப்பசி மாதம் 19-ஆம் நாள், 5.11.2025 புதன்கிழமை, ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு ஈசனுக்கு அன்னாபிஷேக வைபவம் கீழ்க்கண்டவாறு நடைபெறும்.
மாலை: 4.00 மணிக்கு
அபிஷேகம் ஆரம்பம்
மாலை: 6.00 மணிக்கு
அன்னாபிஷேக தரிசனம்
இந்த அன்னாபிஷேகத்திற்கு பக்தர்கள் தங்களால் இயன்ற நிதி உதவிகளைச் செய்யலாம். ஒவ்வொரு அன்னப்பருக்கையும் ஈசனின் திருவடிவமே ஆகும். ஐப்பசி மாத அன்னாபிஷேக தரிசனத்தைக் காண்பதால் நமக்கு எந்தக் காலத்திலும் அன்னத்தின் மீது வெறுப்பு (அன்னத்வேஷம்) ஏற்படாது. அன்னாபிஷேகத்திற்கு உதவுவதால் நம்மைப் பிடித்துள்ள எதிர்மறை சக்திகள் விலகும். நோய் குணமாகும்.
செய்கின்ற தானத்திலே மிகச் சிறந்த தானம் அன்னதானம். ஈசனுக்கு சாற்றிய அன்னமானது அன்று அன்பர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.
அன்னாபிஷேகத்திற்கு உதவி செய்து ஈசனின் திருவருளைப் பெற வேண்டுகிறோம்.










