• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அருள்மிகு சிவந்தியப்பர் ஆலயம் – விக்கிரமசிங்கபுரம்

siddharbhoomi by siddharbhoomi
February 7, 2025
in கோயில்கள்
0
அருள்மிகு சிவந்தியப்பர் ஆலயம் – விக்கிரமசிங்கபுரம்

அருள்மிகு சிவந்தியப்பர் ஆலயம் - விக்கிரமசிங்கபுரம்

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு விக்கிரமசிங்கபுரம் அருள்மிகு சிவந்தியப்பர் ஆலயம்.

மூலவர் : சிவந்தியப்பர்

அம்மன்/தாயார் : வழியடிமைகொண்டநாயகி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : வாணதீர்த்தம் அருவி (பாணதீர்த்தம்)

பழமை : 500 வருடங்களுக்குள்

ஊர் : விக்கிரமசிங்கபுரம்

மாவட்டம் : திருநெல்வேலி

மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா: புரட்டாசியில் பிரம்மோற்ஸவம், ஐப்பசியில் திருக்கல்யாணம்.

தல சிறப்பு:

சிவன் சன்னதி நுழைவு வாயிலில் பைரவர், அதிகார நந்தி இருவரும் எதிரெதிரே உள்ளனர். பிரகாரத்தில் ஆறுமுக நயினார் (முருகன்) இருக்கிறார். இவருடன் உள்ள வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்பது விசேஷ அம்சம்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு சிவந்தியப்பர் திருக்கோயில்,விக்கிரமசிங்கபுரம்- 627 425, திருநெல்வேலி மாவட்டம்.

வழிகாட்டும் அம்பிகை:

தெற்கு நோக்கிய சன்னதியில் காட்சி தரும் அம்பிகைக்கு, “வழியடிமை கொண்ட நாயகி’ என்று பெயர். இவளை பற்றிக்கொண்டால், வாழும் காலம் சிறப்பாக இருக்கவும், வாழ்க்கைக்குப்பின் மீண்டும் பிறப்பற்ற முக்தி நிலை அடையவும் வழிகாட்டியாக இருப்பாள்.

எனவே, இவளுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. “மார்க்க சம்ரக்ஷணி’ என்றும் இவளை அழைப்பர்.

பிரார்த்தனை:

வாழும் காலம் சிறப்பாக இருக்கவும், வாழ்க்கைக்குப்பின் மீண்டும் பிறப்பற்ற முக்தி நிலை அடையவும் வழிபடுகின்றனர். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு சிவனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சிவனுக்கு வஸ்திரம் அணிவித்து, வில்வ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

தலபெருமை:

தெட்சிணாமூர்த்தி சிறப்பு:

இத்தலத்தில் சிவன், தலையில் தலைப்பாகை கட்டியபடி காட்சி தருகிறார். அம்பாள் வழியடிமை கொண்டநாயகி தனியே தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

பொதுவாக தெட்சிணாமூர்த்தி இடது கையில் ஏடு அல்லது அக்னியை ஏந்தியபடிதான் காட்சி தருவார். இத்தலத்தில் இவர் தன் இடக்கையை, காலுக்கு கீழ் இருக்கும் நாகத்தின் தலை மீது வைத்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். நாகதோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

சிவந்தியப்பர் என்ற சிற்றரசர் இப்பகுதியை ஆட்சி செய்தார். சிவபக்தரான அரசர், தன் நிர்வாகம் திறம்பட இருக்கவும், மக்களின் வாழ்க்கை சிறக்கவும் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் சிவனுக்கு கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார்.

இவ்விடத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து, கோயில் எழுப்பினார். சிவனுக்கு மன்னன் பெயரான “சிவந்தியப்பர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. இங்கு அருளும் சிவந்தியப்பர், அரசர் போல இருந்து மக்களைக் காத்தருளுகிறார்.

எனவே, அரசருக்குச் செய்யும் மரியாதை போல, சிவலிங்கத்தின் மீது தலைப்பாகை சூட்டி அலங்கரிக்கின்றனர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

சிவன் சன்னதி நுழைவு வாயிலில் பைரவர், அதிகார நந்தி இருவரும் எதிரெதிரே உள்ளனர்.

பிரகாரத்தில் ஆறுமுக நயினார் (முருகன்) இருக்கிறார். இவருடன் உள்ள வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்பது விசேஷ அம்சம்.

அமைவிடம்:

திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ., தூரத்தில், விக்கிரமசிங்கபுரம் உள்ளது. பாபநாசம் பஸ்களில் சென்று மூன்று விளக்கு பஸ் ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்குச் செல்லலாம்.

Previous Post

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி  அளவீடுகள்.

Next Post

நவகிரகங்களின் சிறப்பு மகத்துவம்

Next Post
நவகிரகங்களின் சிறப்பு மகத்துவம்

நவகிரகங்களின் சிறப்பு மகத்துவம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

February 16, 2026
சிவானந்த லஹரி

சிவானந்த லஹரி

February 15, 2026
காலத்தை அளந்த கோவில்

காலத்தை அளந்த கோவில்

February 14, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »