• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஆடி கிருத்திகை மிகச் சிறந்த பலன்கள் உண்டு

siddharbhoomi by siddharbhoomi
August 9, 2023
in ஆன்மிகம்
0
ஆடி கிருத்திகை மிகச் சிறந்த பலன்கள் உண்டு
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஆடி கிருத்திகை மிகச் சிறந்த பலன்கள் உண்டு

ஆடி கிருத்திகை இவற்றை செய்தால் மிகச் சிறந்த பலன்கள் உண்டு.
⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️
“ஆடி வந்தால் நல்லவை யாவும் தேடி வரும்” என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். வருடத்தின் மற்ற எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு இந்த ஒரு மாதத்தில் தான் அதிகளவு தெய்வங்களை வழிபடுவதற்குரிய சிறப்பான நாட்கள் வருகின்றன.

அதில் ஒன்று தான் முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய “ஆடி கிருத்திகை”. அற்புதமான அந்த ஆடி கிருத்திகை சிறப்பு குறித்தும், அந்நாளில் முருகனின் அருளை பெறும் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் இருக்கும் முறை குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
⭐️
சிவபெருமானின் அருளால் தோன்றியவர் முருகன். ஆறு கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார் முருகப்பெருமான்.

அந்த கார்த்திகை பெண்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் “கார்த்திகை” நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தில் முருகப்பெருமான் வழிபடப்படும் வழக்கம் ஏற்பட்டது.

வருடத்தில் “தை கிருத்திகை” “ஆடி கிருத்திகை” என்ற இரு கிருத்திகைகள் சிறப்பானதாகும்.
⭐️
பொதுவாக ஆடிக் கிருத்திகை தினத்தன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்பட்டாலும் முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான “திருத்தணி” கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு விழாவாக இருக்கிறது. இந்த தினத்தில் முருக பக்தர்கள் காவடி சுமந்து, திருத்தணி மலை மீது ஏறி தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்துகின்றனர்.
⭐️
ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி.?
⭐️
இந்த ஆடி கிருத்திகை தினத்தன்று அதிகாலை வேளையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலம் இட வேண்டும்.

பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் வைத்து உணவு மற்றும் நீரேதும் அருந்தாமல் “கந்த சஷ்டி கவசம்” அல்லது “சண்முக கவசத்தை” மனமொன்றி படிக்க வேண்டும். முடிந்தவர்கள் இந்த தினம் முழுவதும் உணவேதும் உண்ணாமல் வெறும் நீரை மட்டும் அருந்தி விரதம் இருப்பது சிறந்தது.

சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இந்நாள் முழுவதும் உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மாலையில் உங்களுக்கு அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
⭐️
ஆடி கிருத்திகை விரதம் பலன்கள்
⭐️
இந்த ஆடி கிருத்திகை விரதத்தால் உங்களின் கர்ம வினைகள் நீங்கும். செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுதலான திசை நடப்பவர்களுக்கு தீமையான பலன்கள் ஏற்படாமல் காக்கும். திருமண தடைகள் அகலும். சொந்த வீடு கனவு நிறைவேறும். மொத்தத்தில் முருகனின் முழுமையான அருள் கிட்டும்.

Previous Post

தேய்பிறை அஷ்டமி

Next Post

சுதந்திரப்போராட்டத்தில் ஸ்ரீஅரவிந்தரின் பங்கு

Next Post
சுதந்திரப்போராட்டத்தில் ஸ்ரீஅரவிந்தரின் பங்கு

சுதந்திரப்போராட்டத்தில் ஸ்ரீஅரவிந்தரின் பங்கு

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »