ஒவ்வொறு நொடியையும் இறைவன் கவனித்துக் கொண்டே இருக்கின்றான்
இது உங்கள் வாழ்வு! உங்களுக்கு நலன் பயக்கும் வண்ணம் ,நிம்மதி நிறைந்த வண்ணம் ,எச் சோதனைகள் வரினும் சாதனைகள் உங்களை அரவணைக்கும் வண்ணம் அமைத்துக் கொள்ளுங்கள்! –
➡️ஆனால் மிக முக்கிய கோட்பாடுகளுடன்!
➡️உங்கள் ஒவ்வொறு நொடியையும் இறைவன் கவனித்துக் கொண்டே இருக்கின்றான் என்பதை மறக்காமல்,
➡️இன்னொரு மானிடனை கலக்கத்தில் ஆழ்த்தாமல்,
➡️யாதொரு உயிர்க்கும் துரோகம் இழைக்காமல்,
➡️வஞ்சனை சூழ் குணம் இல்லாமல் ,
➡️புறம் பேசாமல் , சிறிதளவும் பொய் , புரட்டு அண்டாமல் ,
➡️தங்கள் சரீரத்தை, ஆன்மாவை பேணி பாதுகாத்து நிறைவாக வாழுங்கள் .!
🎯ஆம்! இப்படி தான் வாழ வேண்டும் என்பது தான் வாழ்வு – எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என நீங்கள் நினைத்தால் – வெறுமனே வாழ்கிறோம் என நினைத்துக் கொண்டு உங்கள் வாழ்நாட்களை கடத்திக் கொண்டிருப்பீர்கள் – அவ்வளவு தான் வாழ்வில் 🦋❤
– காமக்யா ( alias) ஸான்யோ டாஃப்னி











