முன்னேற்றம் என்பது காலத்தைக் குறிக்கிறது, இல்லையா?
என்ன இருந்தாலும், மாட்டு வண்டியில் இருந்து விமானத்தை அடைய நமக்குப் பல நூற்றாண்டுகள் ஆனது.
இப்போது, நாம் சத்தியத்தை அல்லது கடவுளையும் அதே வழியில், காலத்தின் மூலமாக கண்டறியலாமென நினைக்கிறோம்.
நாம் இங்கே இருக்கிறோம், நாம் கடவுள் அங்கு இருப்பதாகவோ, அல்லது தொலைவில் எங்கோ ஓரிடத்தில் இருப்பதாகவோ நினைக்கிறோம்.
மேலும் அந்த தூரத்தை , அந்த இடைப்பட்ட இடைவெளியைக் கடக்க நாம் காலம் தேவைப்படுகிறது என்கிறோம்.
ஆனால், கடவுள் அல்லது சத்தியம் நிலையானது அல்ல, நாமும் நிலையானவர்கள் அல்ல.
அங்கு துவங்குவதற்கு ஒரு நிலையான இடம் கிடையாது, ஒன்றை நோக்கி செல்வதற்கும் நிலையான இடம் கிடையாது.
மனோரீதியான பாதுகாப்பிற்கான காரணங்களால் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலையான இடம் இருக்கிறது என்ற, சத்தியமும் ஒரு நிலையான ஒன்று என்றக் கருத்தைப் பிடித்துக் கொண்டுள்ளோம்.
ஆனால் அது ஒரு மாயை ஆகும், அது உண்மையல்ல.
நாம் மனதுக்குள்ளாக, ஆன்மீக ரீதியாக பரிணமிக்க அல்லது முன்னேற காலம் தேவையெனக் கூறும் கணம், அதன்பிறகு நாம் செய்துகொண்டு இருப்பது ஆன்மீகம் கிடையாது, ஏனெனில் சத்தியம் காலத்திற்கு உட்பட்டது கிடையாது.
காலத்தின் பிடியில் இருக்கும் ஒரு மனம் சத்தியத்தைக் கண்டறியக் காலத்தைக் கோருகிறது.
ஆனால் சத்தியம் காலத்திற்கும் அப்பாற்பட்டது, அதற்கு ஒரு நிலையான இடம் கிடையாது.
மனம் அதன் அனைத்து சேகரிப்புகளில் இருந்தும், உணர்வுநிலையில் மற்றும் உணர்வு அற்றநிலை இரண்டின், (Conscious and unconscious) விடுபட்டு இருக்கவேண்டும், மேலும் அப்போது மட்டுமே அது சத்தியம் என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன எனக் கண்டறியும் தகுதியுடையதாக இருக்கிறது.
Book – Think On These Things – நன்றி











