திதிகள் பதினைந்தில், பஞ்சமி திதி முக்கியமான ஒன்று.
*பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் ஐந்தாவது திதியே, பஞ்சமி.
பஞ்சமி என்றால் ஐந்தாம் நாள் வரும் திதி.
பஞ்ச எனும் வடமொழிச் சொல் ஐந்து எனப் பொருள்படும்.
15 நாட்களைக் கொண்ட தொகுதியில் ஐந்தாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.
30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசையை அடுத்துவரும் பஞ்சமியைச் சுக்கில பட்சப் பஞ்சமி என்றும், பூரணையை அடுத்த பஞ்சமியைக் கிருட்ண பட்சப் பஞ்சமி என்றும் அழைக்கின்றனர்.
பஞ்சமி திதி அனைத்து சுப காரியங்களையும் செய்வதற்கு விசேஷமான திதி ஆகும்.
குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் கருதப்படுகிறது.
நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் தீர இத்திதியில் மருந்து உட்கொள்ளலாம்.
அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
விஷம் தொடர்புடைய பயங்கள் நீங்கும்.
இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதைகள் ஆகின்றனர்.
எனவே நாக வழிபாட்டுக்கு உகந்த திதி இது.
நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்து, வழிபட நாக தோஷம் நீங்கும்.
நாக பஞ்சமி விசேஷ தன்மை கொண்ட திதியாகும்.
ஆவணி மாதத்தில் வருகின்ற பஞ்சமி திதியை நாகப் பஞ்சமி என்று அழைக்கின்றனர்.
பஞ்சமி திதி என்பது வாராஹி தேவியை வழிபடுவதற்கு உரிய நாள்.
சப்தமாதர்களில் ஒருத்தி வாராகிதேவியை பஞ்சமி திதியில் விரதம் இருந்து வாராகி தேவியை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால் எல்லா எதிர்ப்புகளையும் தவிடுபொடியாக்கி இன்னல்களையெல்லாம் போக்கி அருளுவாள். வேண்டியதையெல்லாம் தந்தருள்வாள். தீயசக்திகளை நெருங்கவிடாமல் காத்தருள்வாள்
பஞ்சமியும் செவ்வாயும் இணைந்த நாளில், வாராகி தேவியை விரதம் இருந்து வழிபடுவது சிறப்பானது.
பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் பல நேர்மறையான குணங்களை பெற்றிருப்பார்கள். சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாகவும், நீண்ட ஆயுள் உடையவர்களாகவும் இருப்பார்கள்.
பொதுவாக கோவில் சம்பந்தமான சுபக் காரியங்களைச் செய்ய ஏற்ற திதியாகும். எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது.
குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம்.
விஷ பயம் நீங்கும். ஜாதகத்தில் நாக தோஷம் கொண்டவர்கள் இத்திதியில் புற்றுள்ள கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தால், அவர்களின் நாக தோஷம் நீங்கும். இந்த திதியில் பிறந்தவர்கள் அறிவாளிகளாகவும் ஆயுள் பலம் மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள்.
மிதுன, கன்னி ராசிக்காரர்கள் இத்திதி தினங்களில் கவனமாக செயலாற்ற வேண்டும்.
பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் ரகசியம் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
பேராசை கொண்டவர்களாகவும், தைரியமிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும்.
அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.
ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது.
ஞாயிறு-அஷ்டமி, திங்கள்-நவமி, செவ்வாய்-சஷ்டி, புதன்-திரிதியை; வியாழன்-ஏகாதசி, வெள்ளி-திரயோதசி, சனி-சதுர்த்தசி திதி. இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் வெற்றி கிடைக்கும்.
பூரணை திதி பஞ்சமி, தசமி, பவுர்ணமி ஆகியவை பூரணை திதிகள் எனப்படும்.
இந்த நாட்கள் சுபகாரியங்களை செய்ய ஏற்றவை.
திருமணம், நிச்சயதார்த்தம், யாத்திரை, சாந்தி ஹோமங்கள், யாகங்களை செய்தல், தவம், தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுதல் முதலிய நல்ல காரியங்களை செய்ய இத்திதி ஏற்றது திதி தேவதையை முறையாக வணங்கினால் தொட்டதெல்லாம் துலங்கும்.
திதி தேவதை படத்தை வைத்து அதற்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால் உங்களின் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ முடியும்.
விதிப்படி நீங்கள் அனுபவிக்க வேண்டிய கர்ம பலன்கள் எப்படி அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்களோ அதே போல, உங்களின் புண்ணிய பலன்களையும் நீங்கள் அனுபவிக்க இந்த தேவதைகள் அருள் புரிவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
பஞ்சமியில் பக்தியுடன் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்
பஞ்சமி திதியன்று ‘லலிதா திரிபுர சுந்தரி’ தேவியின் வழிபாடும், ஸ்ரீ சக்கர வழிபாடும் செய்ய சதா காலம் கஷ்டத்திலேயே உழன்று கொண்டு தரித்திர நிலையில் இருப்போருக்கு கூட நல் வழி பிறக்க ஆரம்பிக்கும்.
காலையில் தேஹிவியை வழிபட்டு ‘லலிதா சஹஸ்ரநாமம்’ மூன்று முறை கூறலாம்-
முடியாதவர்கள் கேட்டு வரலாம். கோவிலில் சென்று வழிபடுபவர்கள் கர்ப கிரக விளக்கிற்கு தூய நெய் சேர்த்து வரலாம். (பாலா திரிபுர சுந்தரி, பிரத்தியங்கரா தேவி மற்றும் வாராஹி கோவில்களுக்கும் செல்லலாம்)
பஞ்சமி திதி நாளில் கூற வேண்டிய சக்தி எளிய ஆனால் மிக அதீத சக்தி வாய்ந்த மந்திரம்.
ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ
பஞ்சமி திதி தினத்தன்று காலை மற்றும் மாலை வேளைகளில் ஐந்து வகை எண்ணெய் கலந்து குத்துவிளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி, கற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து வேண்டுதல்களை மனதிற்குள் நினைத்துக் கொண்டே, பஞ்சமி சக்தி தேவியை மேற்கூறிய மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதித்து வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். பொன், பொருள் ஆகியவற்றின் சேர்க்கை உண்டாகும்.🌹











