“சூரியனுக்குக் களங்கம் உண்டோ?”
விதியை மீறி, ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, பால் அருந்திய பெரியவாளும் பிராயச்சித்தமும்.
சூரியனுக்குக் களங்கம் உண்டோ? அதிலும் ஞானசூரியனுக்கு?
ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, பெரியவா பிக்ஷை ஏதும் செய்வதில்லை. பால் கூட அருந்துவதில்லை.
பெல்காம் அருகில் ஸாம்ரா என்று ஒர் ஊர். பக்தர்கள் வந்து குறைகளைச் சொல்லி, ஆசி பெற்றுக்கொண்டு சென்ற வண்ணம் இருந்தார்கள்.
‘எல்லோருக்கும் பதில் சொல்லிச் சொல்லி பெரியவாளுக்குத் தொண்டை வலிக்குமே’ என்ற கவலை அணுக்கத் தொண்டருக்கு. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பது ஞாபகமில்லை.
பெரியவா ஓய்வுக்காக உள்ளே வந்ததும், பால் கொண்டு வந்து வைத்தார்.
மறுநாள் காலை.
“ஆகா…..ஆகா…” என்று பதறினாற் போல் சொன்னார்கள், பெரியவா.
தொண்டர்களுக்குத் திக் என்றது.
“நேத்திக்கு ஞாயிற்றுக்கிழமை. மறந்துபோய் ராத்திரி பால் சாப்டுட்டேன். தப்பு…தப்பு…”- பெரியவா.
அன்று முதல் ஒரு மாத காலத்துக்கு, பால், பழங்களைத் தவிர்த்தார்கள், பெரியவா.
பிராயச்சித்தமாம்.
சூரியனுக்குக் களங்கம் உண்டோ? அதிலும் ஞானசூரியனுக்கு.?











