• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சாந்தி முகூர்த்தம் என்றால் என்ன?

siddharbhoomi by siddharbhoomi
October 28, 2025
in ஜோசியம்
0
சாந்தி முகூர்த்தம் என்றால் என்ன?

சாந்தி முகூர்த்தம் என்றால் என்ன?

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சாந்தி முகூர்த்தம் என்றால் என்ன?

அதன் சிறப்பு யாது?

‘பிரதமார்த்தவ சாந்தி முகூர்த்தம்’

என்பதே அதன் முழுமையான பெயர்.

முதலில் இருக்கும் வார்த்தையானது காலப்போக்கில் காணாமல் போய்

சாந்தி முகூர்த்தம்

என்ற பெயர் மட்டும் நிலைத்துவிட்டது.

சிவசக்தி ஐக்கியமாக இந்த முகூர்த்தத்தினைச் சொல்வார்கள்.

திருமணத்திற்கு லக்னம் நிச்சயிக்கும்போது

எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ

அதே அளவிற்கு இந்த சாந்தி முகூர்த்த லக்னத்திற்கும்

மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இந்த முகூர்த்தமானது

தனிப்பட்ட கணவன் – மனைவியின்

மன சந்தோஷ ஆரம்பத்துக்காக நிர்ணயிக்கப்படுவது அல்ல.

🪭‘ பிரஜோத்பத்தி’

என்ற முக்கியமான கடமையை நிறைவேற்றுவதற்காக

பெரியவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ள ஒரு நிகழ்வுதான்

இந்த சாந்தி முகூர்த்தம்.

சற்று விளக்கமாகவே காண்போம்.

ஒருவன் தனது பிரம்மச்சரிய காலத்தில்

வேதங்களையும்,

வித்தைகளையும்

சரிவர கற்பதன் மூலம் ரிஷிகளை திருப்திபடுத்துகிறான்.

வேதங்கள் என்றால் இது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்காக என்று தவறாக எண்ணக்கூடாது.

இன்று நாம் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொள்கிற கணிதம்,

அறிவியல் உட்பட அனைத்துப் பாடங்களும் ஏற்கெனவே

வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள்தான்.

இவை அனைத்தும் அன்றைய காலக்கட்டத்தில் வாழ்ந்த

விஞ்ஞானிகளான மகரிஷிகளின் மூலமாக

இந்த உலகத்திற்கு எடுத்துரைக்கப்பட்டவை.

இதையே நாம் வேதமாக போற்றுகிறோம்.

தங்களால் படைக்கப்பட்ட கருத்துகளை ஒருவன் படித்து

அதன்படி நடந்துகொள்வதைக் கண்டு

மகரிஷிகள் திருப்தி அடைகின்றனர்.

ஆக,

வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை கல்வியினைக் கற்றுக் கொள்கின்ற காலம் பிரம்மச்சரியம்.

அதேபோல ஒருவன் யாகங்கள்,

யக்ஞங்கள்

முதலானவற்றை செய்வதன் மூலம் தேவர்களை திருப்திபடுத்துகிறான்.

யாகங்கள் செய்வது என்றால்

அவனே நேரடியாகச் செய்ய வேண்டும் என்பது இல்லை.

அதற்குரிய பொருளுதவியைச் செய்து,

தகுந்த பண்டிதர்களைக் கொண்டு

அந்தந்த தேவர்களுக்கு உரிய அவிர்பாகத்தைத் தருவதன் மூலம்

தேவர்களையும்,

கந்தவர்களையும் திருப்திபடுத்தி

அவர்களுடைய ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்கிறான்.

அடுத்ததாக

பூமியில் பிறந்த அனைவருக்கும் தங்களுடைய பித்ருக்கள்,

அதாவது,

முன்னோர்களை திருப்திபடுத்த வேண்டிய முக்கியமான கடமை ஒன்று உண்டு.

அந்தக் கடமையின் பெயர்தான்

🪭 பிரஜோத்பத்தி.

அதாவது பிரஜைகளை உற்பத்தி செய்வது.

படைக்கும் தொழிலைச் செய்கின்ற பிரம்மாவினுடைய அருளாசி அந்த நேரத்தில் தேவைப்படுகிறது.

வம்சம் விருத்தி அடையும்போதுதான் பித்ருலோகத்தில் உள்ள முன்னோர்கள் மோட்ச

கதிக்குச் செல்ல இயலும்.

ஒரு பெண்ணின் துணையின்றி

ரிஷிகளையும்,

தேவர்களையும்

முன்சொன்ன இரண்டு கடமைகளின் மூலம் திருப்திபடுத்திவிட முடியும்.

ஆனால்,

பித்ருக்களை கரையேற்ற,

அவர்களை திருப்திபடுத்த

ஒரு பெண்ணின் துணை நிச்சமாகத் தேவைப்படுகிறது.

சிவமும், சக்தியும்

ஐக்கியமானால் மட்டுமே உலகத்தில் உயிர்கள் தோன்ற முடியும்.

உயிர்கள் இன்றி உலகம் இயங்காது.

ஆக இந்த உலகத்தையே இயக்குகின்ற

அந்த சிவசக்தி

ஐக்கியத்தினை

ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் வாழ்வினில் முதன்முதலில் உணருகின்ற

அந்த சாந்தி முகூர்த்தம் என்பது இதனால்தான் இத்தனை முக்கியத்துவமும்,

சிறப்பும் பெறுகிறது.

முதலில் சாந்தி முகூர்த்த விளக்கத்தினை பார்ப்போம் :-

கணவனும் மனைவியும்

கைப்பிடிக்க

மணம் முடிக்க

ஒரு முகூர்த்தமும்

கலவிக்கு ஒரு முகூர்த்தமும்

என இரு முகூர்த்தங்கள் இருக்கின்றன.

இந்த இரு விசயத்திற்கு தான் நிறைய முக்கியத்துவங்கள் இருக்கின்றன என்பதால்

அதை முகூர்த்த நேரத்தில் செய்யவேண்டும்

என சாஸ்திரம் கூறுகிறது.

ஒரு முகூர்த்தம் என்பது

1½ மணி நேரம்

(3¾ நாழிகை)

என்பது கணக்கு.

ஒரு வருடத்திற்கு சுத்தமான முகூர்த்தம் என்பது

ஒரு சில மட்டுமே கிடைக்கிறது.

அந்த நேரத்தில் சாந்தி முகூர்த்தம் வைத்தால் சிறப்பு.

ஆனால்

அந்த முகூர்த்தத்திற்காக காத்திருத்தல் என்பது

இன்றைய சூழ் நிலையில் ஒவ்வாத விசயம்.

சில நேரங்களில் அந்த நேரம் சில நாட்களில் அந்தி நேரம் ஏன் பகலில் கூட வந்து விடும்.

சுத்தமான முகூர்த்தம் என்றால்

மாந்தி நிற்காத (பார்க்காத)

நல்ல ஓரை,

கரணம்,

முக்குண வேளை,

நட்சத்திர தியாச்சியம்,

வேதை,

சுப விலக்கு,

கரி நாள்,

யோகம்,

சூலம்,

யோகினி நிற்கும் திசை,

ஜீவன்,

வக்கிர நிலைகள்,

பிறை அம்சங்கள்,

கோள் சாரம்,

விஷ கடிகை, தோஷங்கள்,

வாசி,

பஞ்ச பட்சி,

சகுனங்கள்,

சூனியங்கள்,

மாதவிலக்கு கணக்குகள்,

தசாபுத்தி

மற்றும்

ஆண்

மற்றும்

பெண்ணின்

ராசிகள் போன்றவற்றை கணித்து

தீயவைகளை ஒதுக்கி

நல்ல முகூர்த்தம் கண்டு

இந்த நேரத்தின் முக்கியத்துவத்தினை

மணமக்களுக்கு முன்பே எடுத்து சொல்லி

தயார் நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION

என்னும் ஆங்கில பழமொழியை

இங்கு நாம் மனதில் கொள்ளவேண்டும்.

ஆரம்பம் சரியான நேரம் எனில்

அடுத்து எல்லாமே சுபமே.

மிக நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கை

மிக நன்றாக நடக்கும்

என்பதில் சந்தேகம் இல்லை.

அகால சேர்க்கையில் உண்டாகும் பலன்களை சொல்ல ஆரம்பித்தால் பக்கம் பக்கமாக எழுத வேண்டி வரும்.

இதன் விளைவாக வரும் குழந்தைகள் தானும் சிரமப்பட்டு

சமுதாயத்தினையும் சிரமப்படுத்தும்.

துரதிர்ஷ்டம் யாதெனில்

இப்பொழுது எல்லாம் திருமணத்திற்கு நாள் குறிக்க தேர்ந்த குருக்கள்

அல்லது

ஜோதிடரிடம் செல்லாமல்

காலண்டரை பார்த்து

அவர்களே நாள் குறித்து கொள்கின்றனர்.

அப்புறம்

திருமண மண்டப தேவைக்காகவும் நாட்கள் குறிக்கப்படுகின்றன.

மேலும்

திருமண இரவில் நல்ல நேரம் கூட பார்க்காமல் சாந்தி முகூர்த்த ஏற்பாட்டை நடத்தி விடுகின்றனர்.

இதனால் பிறக்கும் குழந்தையின்

குணம்,

ஆரோக்கியம்

என பல முக்கிய இடங்களில் குறைகள் ஏற்படலாம்.

பிறப்பு சரியாக இருந்தால் வளர்ப்பு எளிதாகும்.

இல்லை எனில் இதற்காக நிறைய மெனக்கெடவேண்டும்.

நம் கடமையை சரியாக செய்து விட்டால் பலன் சரியாகவே இருக்கும்.

பலருக்கு இயல்பாகவே நல்ல நேரத்தில் முகூர்த்தம் அமைந்து விடுகிறது.

அவர்கள் அதை கணித்து தெரிந்துகொள்ளவில்லை

என்றாலும் நல்ல நேரம் நல்ல நேரமே.

காதலித்து மணம் முடிப்பவர்களின் விசயத்தில் பார்த்தோமேயானால்,

அவர்களில் உடலில் இருந்து வரும் அலைக்கற்றைகள்

(wave length & vibration) ஒன்றையொன்று ஈர்த்தே இருக்கும்.

அதனால்தான் அவர்களுக்குள் காதல் ஈர்ப்பே வருகிறது.

எனவே கந்தர்வ விவாக கூடல்களில் கால நேரங்கள் அனிச்சையாகிறது.

அனால்

நாடக காதல்களில் முடிவு நன்றாக இருப்பதில்லை.

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் இவைகளையும் முன்கூட்டியே கணக்கிட்டு நிச்சயத்துவிட வேண்டும்.

மேற்கூறிய உடல் அலைகள் சேர்வதற்காக நிறைய சடங்குகளை பெரியவர்கள் விளையாட்டுக்கள் வாயிலாக நமக்கு அளித்திருக்கிறார்கள்.

குறைந்தது 7 நாட்களுக்கு முன்பிருந்தே மணமக்களுக்கு நல்ல உணவுகளை அளிக்க வேண்டும்.

அதனால்

திசு உற்பத்தி நன்றாக இருக்கும்.

எளிதில் சீரணம் ஆகும் நல்ல சத்து நிறைந்த உணவுகளாக இவை இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

திருமணம் வரை உடலில் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது.

சாந்தி முகூர்த்த நேரமாக குறிப்பிட்டு தரும் முகூர்த்த வேளையில் உணவு ஏதும் அருந்தக்கூடாது.

அதற்கு முன்போ பின்போ சாப்பிட தடை இல்லை.

கலவி நேரத்தில் பேசவும் கூடாது என சாஸ்திரம் கூறுகிறது.

இல்லை எனில்

பிறக்கும் குழந்தையின் பேச்சுத்திறன்

மற்றும்

வாதத்திறனில் குறை இருக்கும்.

சாந்தி முகூர்த்த மனம் மற்றும் உடல் ஒற்றுமைகளை பொருத்தம் பார்க்கும் சமயமே (வேதை பொருத்தம்) கண்டுகொள்ள முடியும்.

தேர்ந்த ஜோதிடர் இதை எளிதில் கண்டு விடுவார்.

பொருத்தம் பார்க்கும் சமயத்தில் சில பொருத்தங்கள் இல்லை எனில் அதமம் என ஒதுக்கிவிடுவர்.

அதில்

ரச்சு

மற்றும்

வேதை

முக்கியம்.

அதே போல சூரியன் நின்ற நட்சத்திரத்தில் இருந்து

மூலம் நட்சத்திரம் வரை எண்ணிக் கணக்கிட்டு

எத்தனை எண் வருகிறதோ

அதே எண் அளவு

பூராட நட்சத்திரத்தில் இருந்து

எந்த நட்சத்திரத்தில் முடிகிறதோ

அதே எண் தான்

லாடம்

என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

இது வாழ் நாள் முழுவது விலக்க வேண்டிய நட்சத்திரம் ஆகும்.

எளிதில் விளங்க,

ஒருவனின் ஜாதகத்தில் சூரியன் பூசம் நட்சத்திரத்தில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

கணக்கிட்டால் பூச நட்சத்திரத்தில் இருந்து 12வது நட்சத்திரமாக மூலம் வரும்.

அதன் பிறகு பூராட நட்சத்திரத்திலிருந்து கணக்கிட்டால் 12வது  நட்சத்திரமாக ரோஹிணி வரும்.

இந்த நட்சத்திரமே அந்த ஜாதகருக்கு லாடம் ஆகும்.

இந்த நட்சத்திர தினத்தை எப்பொழுது நல்ல விசயங்களுக்கு பயன்படுத்தக்கூடாது.

இது பின் வரும் கணவன் மனைவி சேர்க்கைக்கும் பொருந்தும்.

அவரவர்கள் ஜாதகத்தில்

சூரியனின் நிலையை பாதசார நிலையில் காண  முடியும்.

குழப்பம் இருப்பவர்கள் தேர்ந்த ஜோதிடரிடம் தெரிந்து கொள்ளவேண்டும்.

வேதனை என்னவெனில்

மக்கள் தாங்கள் ஏற்கன்வே எடுத்துவிட்ட முடிவை

ஜோதிடரின் வாயில் இருந்து வரவழைக்க நினைப்பதுதான்.

ஒரு விசயத்தினை செய்யக்கூடாது என சொன்னால் மக்கள் விடுவதில்லை.

அப்படி செய்தால் என்ன விளையும் எனவும்

அதற்கு பரிகாரங்கள் என்ன என்றும் ஜோதிடர்களை குடையக்கூடாது.

அவர் குரு ஸ்தானத்தில் இருக்கிறார் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

பணம் (தட்சனை) பெறுவதால் அவர் நமக்கு ஊழியர் அல்லர்.

தட்சனை என்பது அவரின் வாழ்க்கையை நடத்தத்தானே அன்றி உங்களின் கருத்துக்களை திணிக்க அல்ல.

வேண்டாம் என்று சொல்லப்பட்டு விட்டால் விட்டுவிட வேண்டும்.

மாற்று வழிகளையே சிந்திக்க வேண்டும்.

காலண்டரில் நாட்களை கண்டு குறித்துக்கொண்டு பின் மண்டபத்திற்கு முன் தொகையும் அளித்துவிட்டு பிறகு ஜோதிடரிடம் வருவது தவறாகும்.

ஜோதிடரிடம் மணமக்களுக்கு பொருத்தமான நாட்களை கணித்து பெற்றுக்கொண்டு அதற்கேற்றவாறு மற்ற பணிகளை தொடங்குவதே சரி.

திருமணத்தை அதற்குரிய முகூர்த்த நேரத்தில் தான் செய்யவேண்டும்.

🪭 பிரம்ம முகூர்த்தம் கூட சரி கிடையாது.

மற்ற எந்த ஒரு வேலைக்காகவும் / நபருக்காகவும் முகூர்த்த நேரத்தினை மாற்றக்கூடாது.

எந்த ஒரு மங்கல வேலையையும் ஆரம்பிக்கும் முன்பு

கணபதியையும்,

குல தெய்வத்தினையும்

மனதில் நன்றாக வணங்கிக்கொள்ள வேண்டும்.

அமாவாசையின் கடைசி நேரத்தில்

பிரதமையின் முதல் பகுதியில்

சஞ்சரிக்கும் நட்சத்திரத்தில் விஷக்கடிகை வருமானால்

அதை குருதோஷம் என சாஸ்திரம் கூறுகிறது,

இதுவும் சாந்தி முகூர்த்தத்தில் தவிர்க்கவேண்டியதாகும்.

சூரியோதய முகூர்த்த வேளை 1½ மணி நேரம் பிராதகால முகூர்த்தம்.

மதியம் வருகிற முகூர்த்தம் அவிச்சின் முகூர்த்தம்.

ஆனால்

அஸ்தமனத்தில் வரும் முகூர்த்தம்

கோதாளி முகூர்த்தம் என குறிப்பிடப்படுகிறது.

இந்த முகூர்த்தம் நல்ல முகூர்த்தம் கிடையாது.

கோதாளி முகூர்த்தம் வரும் நாட்களிலும் சாந்தி முகூர்த்தம் விலக்க வேண்டும்.

அதே போல நாட்களில் சனி மற்றும் செவ்வாய்கிழமைகளை அசுப நாட்கள் என கொண்டு விலக்கி விடவேண்டும்.

கிழக்கு மேற்காக படுக்கலாம்.

தெற்கு இரண்டாம் பட்சமே.

வடக்கு திசையில் தலைவைத்து படுக்கலாகாது.

சாந்தி முகூர்த்தம் முடிந்த,

விடியும் நேரத்தில் அமங்கலிகளை பார்க்கலாகாது.

மணமக்களின் பெற்றோர்களை விட அத்தை மற்றும் அக்காமார்களே நலங்குகளை கவனிக்கவேண்டும்.

அதே போல தலை ஆடி மாதம் மணமக்கள் விலகி இருக்கவேண்டும்.

இன்னும் நிறைய விசயங்கள் இருந்தாலும்

சில குறிப்பிட்ட முக்கிய விளக்கங்களை மட்டுமே அளித்திருக்கிறேன்.

எனவே முகூர்த்தம் குறிப்பதை விளையாட்டாக எண்ணாமல்

வேதம்,

ஜோதிடம்

பயின்றவர்களின் துணைகொண்டே நிர்ணயிக்கவேண்டும்.

நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் நன்மையையே விளைவிக்கும்.

Previous Post

இந்த உலகை பூலோகம் என்றார்கள்

Next Post

ஈசனுக்கு அன்னாபிஷேக வைபவம்

Next Post
ஈசனுக்கு அன்னாபிஷேக வைபவம்

ஈசனுக்கு அன்னாபிஷேக வைபவம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »