• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில்

siddharbhoomi by siddharbhoomi
February 15, 2025
in கோயில்கள்
0
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில்

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில்

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில்

இராமேஸ்வரம் அன்னை மலைவளர்காதலி

(பர்வதவர்த்தினி) உடனமர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் குரோதி ஆண்டு  மகாசிவராத்திரித் திருவிழா-2025.

(விழா பத்திரிக்கை இணைக்கப்பட்டுள்ளது)

குரோதி, மாசித் திங்கள் ௬ ஆம் நாள் செவ்வாய்க்கிழமை. [18.02 .2025 ] காலை திருக்கொடியேற்றம்

குரோதி, மாசித் திங்கள் ௧௪ ஆம் நாள் மகாசிவராத்திரி [ 26.02.2025 ] புதன்கிழமை காலை திருத்தேர்.

இரவு – வெள்ளி இரதம்.

குரோதி, மாசித் திங்கள் ௧௫ ஆம் நாள்- மாசி அமாவாசை தீர்த்தவாரி [ 27.02.2025 ]

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில்,

இராமேஸ்வரம்,

இராமநாதபுரம் மாவட்டம் – 623 526.

இறைவன் பெயர்: இராமநாதசுவாமி

இறைவி பெயர்: பர்வதவர்த்தினி அம்பிகை.

இத்தலத்துக்குத் திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டும் என மொத்தம் மூன்று பதிகங்கள் உள்ளன.

இராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது இராமேஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம்.

இந்தியாவில் மிகவும் தெய்வீகத்தன்மை உடையதாகக் கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரமும் ஒன்றாகும். இராமேஸ்வரம்

கோவிலுக்கு வந்து மூலவர் இராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும், ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமைகளாகக் கருதப்படுகின்றன.

இறந்தவர்களுக்காகத் திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கியத் தலம் ஆகும். மூர்த்தி,

தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புபெற்ற தலம் இராமேஸ்வரம்.

தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில், பாக் ஜலசந்தியில் உள்ள இராமேஸ்வரம் தீவில் இராமநாதசுவாமி ஆலயம்

அமைந்துள்ளது.

பல ஆண்டுகளாக பாம்பன் தொடரிப் பாலம் மூலமாகத்தான் இராமேஸ்வரம் செல்ல முடியும் என்று இருந்த நிலை மாறி, இப்போது

பாம்பன் சாலைப் பாலமும் இருப்பதால் எளிதாக இராமேஸ்வரம் சென்றுவர முடியும்.

பாரதத்தில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இராமேஸ்வரம் தலமும் ஒன்று. பாரதத்தில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு

தலங்களையே வட பாரதத்தில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர். அவை முறையே, வடக்கே பத்ரிநாதம், கிழக்கே

ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே இராமநாதம்.

இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான இராமநாதம் ஒன்றே சிவஸ்தலம். இத்தலத்தில்

இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாகத் திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம், சுவாமி சந்நதியின் முதல் கிழக்குப் பிராகாரத்தில் உள்ள

சிறிய சந்நிதியில் இருக்கிறது.

இலங்கை மீது படையெடுத்து இராவணாதி அரக்கர்களை வென்று, இராமன் அயோத்திக்குத் திரும்பும் வழியில், இராவணனைக்

கொன்றதனால் ஏற்பட்ட பழியைப் போக்கிக்கொள்வதற்கு, இராமேஸ்வரத்தில் சீதாப்பிராட்டியால் மணலால் அமைக்கப்பட்ட

சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிவபெருமானை வழிபட்டார் என்றும் புராண வாயிலாக அறியப்படுகிறது.

இராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்துக்கு இராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது.

வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள இராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணியத் தலங்களாகக் கருதப்படுகின்றன.

காசிக்குப் புனிதப் பயணம் சென்றவர்கள், இராமேஸ்வரம் தலத்துக்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை

வழிபட்டால்தான், காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது ஹிந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும்.

இராமாயணத் தொடர்புடைய இராமலிங்கத்தை வழிபட, பாரதத்தின் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள், பல்வேறு மாநிலங்களில்

இருந்தும் வருகின்றனர். எனவே, இராமேஸ்வரக் கோவிலை பாரதத்தின் ஒருமைப்பாட்டுக்குரிய ஒரு சிறந்த சின்னமாகக் கருதலாம்.

இலங்கைப் போரில் இராவணனைக் கொன்ற பிறகு, சீதையை சிறைமீட்டு இராமபிரான் அழைத்துவருகிறார். இராமேஸ்வரம் தலம்

வந்த பிறகு, இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனைச் சிவலிங்கம்

கொண்டு வருமாறு காசிக்கு அனுப்புகிறார்.

சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்துக்குள் அனுமன் திரும்பி வராததால், கடற்கரையில் உள்ள மணலால் சீதை ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். இராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார்.

காலம் கடந்து வந்த அனுமன், தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று, தனது வாலால் இராமபிரான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று தோல்வியுற்று நின்றார்.

அனுமனை இராமன் சமாதானப்படுத்தி, அனுமன் கொண்டுவந்த இலிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த இலிங்கத்துக்கு அருகில் பிரதிஷ்டை செய்தார். மேலும், அனுமன் கொண்டுவந்த இலிங்கத்துக்கே முதல் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம், இராமலிங்கத்துக்கு வடப்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த இலிங்கம் காசி விஸ்வநாதர் எனப்படும். இன்றும் இந்தக் காசி விஸ்வநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது.

பிறகே, இராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கத்துக்குப் பூஜை நடைபெறுகிறது.

இராமேஸ்வரம் திருக்கோவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். 865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடைய இராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது.

இதன் உயரம் சுமார் 126 அடி. மேற்கில் உள்ள கோபுரம் சுமார் 78 அடி உயரம் உடையது. இக்கோவிலின் நான்கு பக்கமும் வாயில்கள் அமைந்திருந்தாலும், வடக்கு, தெற்கு வாயில்கள் உபயோகத்தில் இல்லை. ஆலயத்தினுள் இராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகியோருக்கு தனித்தனி விமானங்கள் அமைந்திருக்கின்றன.

சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சந்நிதியில் சீதாதேவியால் உருவாக்கப்பட்டு இராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கர், சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார்.

இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் பட்ட தழும்பை இன்றும் காணலாம். சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும்.

மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் இராமன், சீதை, இலட்சுமணன் ஆகியோருடைய திருஉருவங்களைக் காணலாம். இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார்.

அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி, இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. , கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிராகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது. தினமும் காலை 5 மணிக்கு இராமநாதசுவாமி சந்நதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் நடக்கிறது.

இந்த அபிஷேகத்தை தரிசிக்கக் கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்துக்குக் கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இது சேதுபீடம் ஆகும்.

இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிராகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிராகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிராகாரம், உலகப் பிரசித்தி பெற்றதாகும்.

முத்துவிஜயரகுநாத சேதுபதி அவர்களால் (1735 – 1746) கி.பி. 1740-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரசித்தி பெற்ற மூன்றாம் பிராகாரம் அமைக்கும் பணி, முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் (1740 – 1770) கட்டி முடிக்கப்பட்டது.

இந்தப் பிராகாரம் வெளிப்புறத்தில் கிழக்கு, மேற்காக 690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும், வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது.

இந்தப் பிராகாரத்தில், இராமபிரானுக்கு கடலில் பாலம் (சேது பாலம்) அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் இலிங்க சந்நதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சந்நதியும் உள்ளன.

இந்த நடராஜர், ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார்.

இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தைவிட தீர்த்தமாடுவதுதான் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும், வெளியே மேலும் பல தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன.

அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுவதைத் தொடங்கி, பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு, ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு புயலில் தனுஷ்கோடி அழிந்தபிறகு, கோயில் முன்பு உள்ள அக்னி தீர்த்தக் கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது.

அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில்தான் முன்னோர்களுக்குத் தர்ப்பணங்கள், பித்ரு கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை ஆகிய தினங்களில், பக்தர்கள் கூட்டத்தால் இராமேஸ்வரம் நிரம்பி இருக்கும்.

Previous Post

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

Next Post

தச வாயுக்கள்

Next Post
தச வாயுக்கள்

தச வாயுக்கள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »