திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இருந்து 35கிமீ போளூர் ஆரணி செல்லும் வழி உள்ள தென்மாதிமங்கலம் வழியாக பருவதமலை பயணம் .
மலை ஏற இரண்டு வழி உள்ளது கடாலடி வழி தென்மாதிமங்கலம் வழி . தென்மாதிமங்கலம் வழியில் 1263 படிக்கட்டுகள் உள்ளது .
கார் பார்க்கிங் இடத்தில் இருந்து 7 கிமீ வரும் நடைபயணம் அதில் 1 1/2 கிமீ தூரம் காட்டு வழிப்பாதை அங்கே வீரபத்திரர் மற்றும் வனதுர்க்கை அம்மன் மற்றும் கன்னிமார் கோவில் உள்ளது
அந்த இடத்தில் வருடத்தில் அனைத்து நாட்களும் அனைத்து நேரத்திலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றன 24×7. அங்கிருந்து சிரிது நடை பயணத்தில் மலை ஏற்ற பயணம் ஆரம்பமாகும் .
இந்த வழியில் மொத்தம் 1263 படிகள் சுமார் 2 1/2 கிமீ க்கு இருக்கும் பின் 2 கிமீ கரடு முரடான மலை பாதை அடுத்து செங்குத்தான90* பாறையில் கடப்பாறை உதவியுடன் மலை ஏறினால் மலை உச்சியில் மல்லிகார்ஜுனர் ஐ காணலாம் .
மலை உச்சியில் மௌன யோகி விடோபானந்த குருஜி யின் தியான குகை அன்னதான மடம் உள்ளது .
மலை ஏற செல்பவர்கள் கண்டிப்பாக குடிக்க தண்ணீர் எடுத்து செல்லவும் இந்த மலையில் இருக்கும் ஒரே பிரச்சனை குடிக்க தண்ணீர் இல்லை பார்க்கிங் மற்றும் வீரபத்திரர் கோவில் இங்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும் மலை ஏறும் 5 கிமீ க்கும் தண்ணீர் வசதி இல்லை.
ஒருவருக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லவும் . குரங்குகளின் தொல்லைகளும் உள்ளது அதற்கும் குடிக்க தண்ணீர் இல்லை பாவம் அதுவும் என்ன செய்யும் .
முன்பு மலை ஏறும் வழியில் ஆங்காங்கே கடைகள் இருந்தது தண்ணீர் பாட்டில் விலை அதிகமாக இருந்தாலும் அவசர தேவைக்கு வாங்கி குடிக்கலாம் . ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை ஒரு கடையும் இல்லை.
எனவே மலைக்கு செல்பவர்கள் இதை மனதில் வைத்து தேவையானதை எடுத்து செல்லவும் . அதே போல் அன்னதானம் செய்யவும் உங்களால் முடிந்ததை கொடுத்து உதவவும் . வருடத்தில் அனைத்து நாட்களும் மலை ஏறலாம் .
இந்த மலையின் சிறப்பு நம் கைகளால் நாம் கொண்டு செல்லும் பூஜை பொருட்களை வைத்து நாமே அபிஷேகம் செய்து பூஜை செய்யலாம் .
ஓம் நமச்சிவாய










