ஒன்று
சிவன் ஒன்றே இறை
இரண்டு
ஆண் பெண் என இரண்டும் சிவனே
மூன்று
மூன்று விழிகள் கொண்டவன் சிவனே
நான்கு
நான்கு மறைகளின் சாரம் சிவனே
ஐந்து
வானம் நிலம் காற்று நீர் நெருப்பு என் ஐம்பெரும்பூதமாகத் திகழ்பவன் சிவன்
ஆறு
ஆறு தலைகள் கொண்ட முருகனின் தந்தை சிவன்
ஏழு
ஏழு இசையாக இனிப்பவன் சிவன்
எட்டு
1.தன்வயத்தன் ஆதல்
2.தூய உடம்பினன் ஆதல்
3.இயற்கை உணர்வின ன் ஆதல்
4.முற்றும் உணர்ந்தல்
5.பாசங்களிலிருந்து நீங்கியிருத்தல்
6.பேரருளுடைமை
7.முடிவில் ஆற்றலுடைமை
8.வரம்பிலின்பம் உடைமை
ஆகிய எட்டுக் குணங்களைக் கொண்டவன் சிவன்
ஒன்பது
மக்களைக் காப்பதற்காக நம் சிவன் எடுத்த வடிவங்கள் ஒன்பது.அவை
1.சிவலிங்கம்
2.லிங்கோத்பவர்
3.பைரவர்
4.தட்சிணாமூர்த்தி
5.நடராசர்
6.அர்த்தநாரி
7.சண்டேசுவரர்
8.கால பைரவர்
9.வீரபத்திரர்
பத்து சிவன் ஊழிக் காலத்தில் பைரவராக நடனமாடும் போது
பத்துக் கரங்களுடன் நடனமாடுவார்.
பாடல்
ஒன்று உலகில் சிவம் ஒன்றே
இரண்டு ஆண்பெண்ணாய்ச் சிவமிரண்டே!
மூன்று சிவனுக்குக் கண்மூன்றே!
நான்கு சிவன்புகழ் மறைநான்கே!
ஐந்து ஐம்பெரும் பூதம் சிவனே!
ஆறு சிவமைந்தன் தலை ஆறே!
ஏழு சிவனைப் போற்றும் இசை ஏழே!
எட்டு சிவனுக்குக் குணம் எட்டே!
ஒன்பது சிவனெடுத்த வடிவம் ஒன்பதே!
பத்தே பைரவர் கரம் பத்தே!










