செவ்வாய்க்கிழமையில் எதை எல்லாம் செய்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்?

செவ்வாய் என்றாலே மங்களம் என்று பொருள். கிரகங்களிலேயே செவ்வாய் கிரகம் தான் மங்களகரமான கிரகம்.
செவ்வாய்க்கிழமைகளில் தான் கோவில்களில் பலவித விசேஷமான பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் நடைபெறுகின்றன.
செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கும், அம்பிகைக்கும் உகந்த தினமாகும்.
இவ்வாறு மங்களகரமான செவ்வாய்க்கிழமையில் நமது வீடுகளில் எவற்றையெல்லாம் செய்தால் மங்களம் உண்டாகும் என்பது பற்றியும் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும் இப்பகுதியில் தெளிவாக காண இருக்கிறோம்.
அம்பிகைக்கு உரிய தினமான செவ்வாய்க்கிழமை அன்று விரதமிருந்து மாலை 3 இல் இருந்து நான்கரை மணிக்குல் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்ற வேண்டும்.
அகல்விளக்கு அல்லது எலுமிச்சை பழத்தோலினால் ஆன விளக்கேற்றலாம். நல்லெண்ணெய் ஊற்றி ஐந்து இதழ்கள் கொண்ட திரியை வைத்து விளக்கேற்ற வேண்டும்.
இரண்டு விளக்குகளையும் ஜோடியாக ஏற்றி மனதினை ஒரு நிலைப்படுத்தி உங்கள் பிரச்சினைகளை நினைத்து துர்கை அம்மனை வழிபடும் பொழுது தீராத கஷ்டங்களும் உங்களை விட்டு விலகி ஓடும். தள்ளிப் போகும் காரியங்கள் அனைத்தும் உடனே நடந்தேறும்.
செவ்வாய்க்கிழமையன்று காலையில் எழுந்து முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து முருகனுக்கு உகந்த மலரைச் சூடி ஆறு நெய் தீபங்கள் ஏற்றி முருகனை வழிபட வேண்டும்.
இவ்வாறு வழிபடும் பொழுது உங்களுக்கு முருகப்பெருமானின் அருள் முழுவதுமாக கிடைக்கப்பெறுகிறது. இதனால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும், தள்ளிப்போகும் திருமணங்கள் கைகூடும்.
புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் எப்போதும் நல்ல சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கும்.
செவ்வாய்கிழமையில் செய்ய வேண்டிய காரியங்கள்:
செவ்வாய்க்கிழமையன்று நமக்கு நன்மை செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தையும் செய்யலாம். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, பத்திரத்தில் கையெழுத்து இடுவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
உடன் பிறந்தவர்களிடம் ஏதேனும் பிரச்சனை இருந்தால் செவ்வாய்க்கிழமை அன்று பேசி சரி செய்து கொள்ளலாம். புது வீடு பால் காய்ச்சி குடியேறலாம். பூமி பூஜை செய்து வீடு கட்ட தொடங்கலாம்.
செவ்வாய்கிழமையில் செய்யக்கூடாத காரியங்கள்:
செவ்வாய்க்கு உரிய கிரகமான செவ்வாய் நமது உடலின் ரத்தத்தில் குடியிருக்கிறார். எனவே அன்று நகம் வெட்டவோ, முடி வெட்டவோ, ஷேவிங் செய்வதோ கூடாது.
செவ்வாய்கிழமையில் வீடு துடைப்பது, பழைய பொருட்களை தூக்கி எறிவது போன்ற செயல்கள் எதுவும் செய்யக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்வதால் நம் வீட்டில் உள்ள மகாலட்சுமியை நாம் வெளியில் அனுப்புவதாக அர்த்தமாகும்.
செவ்வாய்கிழமைகளில் நாம் பண வரவை எதிர் பார்க்க வேண்டுமே தவிர பணத்தை வீண் செலவு செய்தல் கூடாது.
செவ்வாய்கிழமை அன்று தான் மகாலட்சுமி நம்மை தேடி வருகிறாள். எனவே லட்சுமியின் அம்சமான பணத்தை அன்று செலவிடுதல் என்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.











