• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

கோயில்களில் செய்யக் கூடாதவை!

siddharbhoomi by siddharbhoomi
September 11, 2021
in ஆன்மிகம்
0
கோயில்களில் செய்யக் கூடாதவை!
2
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

கோயில்களில் செய்யக் கூடாதவை!

ஆலயங்கள் செல்லும் சமயத்தில் செய்யக் கூடாதவை என்று பார்த்தால்.

  1. கோபம், பழி உணர்வு, வெறுப்பு போன்ற இவற்றை மனதில் சுமந்த படி ஆலயம் செல்லுதல் பாவம்.
  1. குளித்து, தூய உடை அணியாமல் செல்லுதல் பாவம்.
  1. நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமலும் கோவிலுக்குச் செல்லக்கூடாது.
  1. அசைவ உணவு சாப்பிட்டு விட்டு கோவிலுக்குச் செல்லக்கூடாது.
  1. சுவாமி சந்நிதிகளை… அவசர, அவசரமாக வலம் வருதல் கூடாது.
  1. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்குச் செல்லக்கூடாது.
  1. சட்டை அணிந்து கொண்டோ அல்லது போர்த்திக் கொண்டோ செல்லக்கூடாது. சட்டை அணியாமல் சென்றால், இறைவனின் ஈர்ப்பு அலைகளை நம் உடம்பு முழுமையாக பெற முடியும்.
  1. சிவன் கோயில்களில் சண்டிகேசுவரர் சிவ சிந்தனையில் இருப்பவர். எனவே அவர் முன் நின்று கை தட்டுவது, சொடுக்கு போடுவது கூடாது. அவர் மீது நூலினை போடுவதும், விபூதி, குங்குமத்தை போடுவதும் அபசாரம் ஆகும்.
  1. விபூதி, சந்தனம், அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்கக்கூடாது.
  1. கோவிலின் உள்ளேயோ, மதில் சுவர்களிலோ எச்சில் துப்புதல் கூடாது. அது மகா பாவம்.
  1. கோவிலின் உள்ளே சண்டை போடுதல், தலை வாரி முடித்தல், சூதாடுதல், சிரித்தல், காலை நீட்டிப் படுத்துக் கொள்ளுதல் கூடாது.
  1. இறைவனுக்கு நைவேத்தியம் ஆகும் போது பார்க்கக்கூடாது.
  1. சுவாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போகக்கூடாது. சிவ மூலவ, ரூபங்களை வாய்ப்புக கிடைத்தால் தொடுதல் அல்லது மிதித்தல் கூடாது.
  1. கோபுரம், கொடிமரம், பலிபீடம், விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.
  1. காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக்கூடாது.
  1. வீட்டில் தினமும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது.
  1. மரணத்தீட்டு உள்ளவர்களை தொட்ட பின் குளிக்காமல் கோவிலுக்குச் செல்லக்கூடாது.
  1. பிரகாரங்களை வலம் வரும் சமயத்தில் தவறுதலாகக் கூட….இறைவனுக்கு சாத்தப்பட்ட திருநீறு, வில்வம், மலர்களை மிதித்து விடக்கூடாது.
  1. ஈர உடையுடனோ அல்லது தூய்மைக் குறைவான உடையுடனோ கோவிலுக்குச் செல்லக்கூடாது.
  1. கோவிலுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு கொண்டு செல்ல வேண்டும். பிறர் பொருளைக் கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்யக்கூடாது.
  1. சுவாமி சிலைகளைத் தொடுவதோ அல்லது நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது.
  1. கோவிலில் உள்ள விளக்குகளைக் கையால் தூண்டவோ, தூண்டிய கையில் உள்ள எண்ணெய் கறையை சுவரில் துடைக்கவோ கூடாது.
  1. ஆலயத்துக்குள் யார் காலிலும் விழுந்து வணங்க கூடாது. காரணம் அங்கு இறைவன் ஒருவரே மகா பெரியவர்.
  1. ஆலய வழிபாட்டுக்கு குடும்பத்தோடு சென்று வருவது நல்லது. பரிகார தலத்துக்கு சென்றால் வேறு யார் வீட்டுக்கும் செல்லாமல் வீடு திரும்ப வேண்டும்.
  1. எந்த ஒரு வெளியூர் ஆலயத்துக்கு செல்லும் முன்பும் குல தெய்வ வழிபாட்டை அவசியம் செய்ய வேண்டும்.
  1. பொழுது போக்கை மனதில் வைத்துக் கொண்டு ஒரு போதும் ஆலயத்துக்கு செல்லாதீர்கள்.
  1. ஆலயங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் ஒரு நாளும் இறந்தவர் வீட்டுக்கு செல்லாதீர்கள்.
  1. ஆலயத்தில் தெய்வ சந்நிதியில் திரை போட்ட பிறகு பிரதட்சணம் வேண்டாம்.
  1. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரம் சொல்லும் போது, மற்றவர்களின் அமைதி கெடாதபடி மனதுக்குள் உச்சரிப்பது நல்லது.
  1. மூலவருக்கு தீபாராதனை நடக்கும் போது கண்ணை மூடி வணங்காதீர்கள். இறைவனை கண் குளிர தரிசித்து வழிபடுங்கள். காலையில் விஷ்ணுவையும் மாலையில் சிவனையும் வழிபடுவது மிகுந்த நல்ல பலனை தரவல்லது.
  1. பொதுவாக ஆலயங்களில், சன்னதிக்கு பின்புறம் அமர்ந்து தியானம் செய்வது மிகவும் தவறு. அதை செய்யாதீர்கள்.
  1. ஆலயத்துக்குள் இருந்து கொண்டு மற்றவர்களிடம் தற்பெருமை பேசுதல் கூடாது. ஆலயத்துக்குள் வந்து விட்டால் மனம் முழுவதும் இறைவனிடமே இருக்க வேண்டும்.
  1. ஆலயத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக வெளியே அமர்ந்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு காசை தானமாக வழங்குங்கள். அப்படியாக தானம் செய்த பலனுடன் இறைவனை சென்று பார்ப்பது விசேஷம். மாறாக, கோவிலிருந்து வெளியே வரும் போது தானம் செய்யாதீர்கள்.
  1. காலை நேரத்தில் கோவிலை சுற்றும் போது உடல் நலம் விருத்தியாகும். மாலை நேரத்தில் கோவிலை வலம் வருவதால் செய்த பாவங்கள் எல்லாம் தொலையும். இரவு நேரத்தில் சுற்றுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
  1. ஆலயத்தின் பிரதான வாயில் தவிர மற்ற வாயிலில் கோவிலுக்குள்ளே செல்லக்கூடாது.
  1. கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும் போது தெய்வத்தை வணங்கக் கூடாது.
  1. இரு சக்கர வாகனங்களில் மற்றும் காரில் பயணம் செய்யும் போது கோவிலுக்கு உள்ளே செல்லாமல் வெளியே இருந்து தெய்வத்தை கும்பிடுவது உகந்ததல்ல. இம்மாதிரியான செய்கை தெய்வத்தை அவமதிப்பதாகும்.
Previous Post

கோயில்களில் செய்ய வேண்டியவை!

Next Post

அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்?

Next Post
அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்?

அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

அன்பு ஒரு இருப்பு நிலை

அன்பு ஒரு இருப்பு நிலை

February 18, 2026
திருவர்ப்பு ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்

திருவர்ப்பு ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்

February 17, 2026
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

February 16, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »