மனிதன் எப்போது நிம்மதியாக இருக்கிறான்?
எனக்கு ஒரு பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது
வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை முடித்துப் பார் என்று #பழமொழி இருக்கிறது.. கல்யாணத்தை முடித்துப் பார் என்பது பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே…
வீட்டைக் கட்டிப்பார்..
ஒருவர் வாடகை வீட்டில் கூடியிருக்கிறார்
வாடகை பணம் தருவதற்கு தாமதம் ஆனால் வீட்டுக்காரர் வீட்டை காலி செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்,.
வாடகை வீட்டில் குடியிருப்போர்களுக்கு எப்போதும் நிம்மதியே இருக்காது… எப்போது வீட்டை காலி பண்ணச் சொல்வார்களோ என்று நினைத்துக் கொண்டே இருப்பார்கள்..
வீட்டில் நம் நினைத்ததை போல் ஒரு ஆணி கூட அடிக்க முடியாது அந்த சூழலுக்கு நாம் தள்ளப்படுவோம்.
ஒவ்வொரு வீடாக மாறும் போது அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.,
சிறுக சிறுக #பணம் சேர்த்து ஓட்டு வீடோ மாடி வீடோ ஒரு வீடு கட்டி அந்த வீட்டில் உட்கார்ந்து சாப்பிடும் போது தான் அப்பாடா இப்போதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது.. இனிமே நம வீடு வீடாக பாத்திரங்களையும் பொருள்களையும் தூக்கிட்டு போக வேண்டிய அவசியம் இல்லை என்று நிம்மதி அடைவார்கள்..
கல்யாணத்தை பண்ணி பார்..
ஒரு பெண் குழந்தையை பெற்று அதை ஆளாக்கி பள்ளிக்கூடம் அனுப்பி காலேஜ்க்கு அனுப்பி அதை படிக்க வைத்து. அதற்கு நல்லது பொள்ளதெல்லாம் செய்து காலேஜ்க்கு போன பிள்ளை கொஞ்சம் லேட் ஆனா கூட இன்னும் பிள்ளைய காணுமே என்று ஒரு பயத்துடனே இருப்பார்கள்.. ஏனென்றால் காலம் அப்படி இருக்கிறது..
அந்தப் #பெண் பிள்ளைக்கு ஒரு நல்ல வரனை தேடி மாப்பிள்ளை எப்படி இருப்பான்?? அந்த குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம் என்று நல்ல விசாரித்து
சம்பந்தம் பேசி பருஷம் போட்டு வரதட்சணை எல்லாம் கொடுத்து
அந்த மணமகன் மணமகளுக்கு மணமேடையில் தாலி கட்டுன பிறகு அந்தப் பெண்ணின் தாய் தகப்பனும் ஆனந்த கண்ணீர் வடிப்பார்கள் அப்பாட இப்போது தான் நிம்மதியாய் இருக்கிறது என்று…. நினைப்பார்கள்…
இந்த இரண்டும் தான் ஒரு மனிதனுக்கு நிம்மதியை கொடுக்கிறது.
நிரந்தர #நிம்மதி இல்லை என்றாலும் அந்த நேரத்துக்கு நிம்மதியை தருகிறது.










