• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

நான் யார்?

siddharbhoomi by siddharbhoomi
September 13, 2026
in மகான்கள்
0
நான் யார்?

நான் யார்

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

நான் யார்?

(தீர்க்கமான) #விசாரணை

“ஒவ்வொருவரும் தமது உடல், மனம், புலன்கள், உறவுகள், சம்பவங்கள்,

புலன் விஷயங்கள் அனைத்தும் ஸத்தியமா அல்லது மித்தியாவா என்று இந்த நான்கு வரையறைகளைக்

கொண்டு விசாரித்து அறிந்துகொள்ள வேண்டும்.”

எந்த #ஒன்று இன்னோர் ஆதாரத்தைச் #சார்ந்திருக்கிறதோ,

அந்த ஆதாரமில்லாமல் அதனால் தனியாக இருக்கவே #முடியாதோ, அந்த ஒன்றை #மித்தியா என்கிறோம்.

#அனைத்திற்கும் ஆதாரமாக எந்த #ஒன்று இருக்கிறதோ, இருக்கிறேன் என்று துளியும் #வெளிப்படுத்தாத ஒன்று எதுவோ – அதுவே #ஸத்தியம் ஆகும்..

‘இங்கே பூனை இருக்கிறது’ என்று நான் சொன்னால் ‘எப்படிச் சொல்கிறீர்கள்’ என்று நீங்கள் கேட்பீர்கள். ‘பார்த்துத்தான் சொல்கிறேன்’ என்பேன் நான். ஒன்று இருக்கிறது என்றால் அது இருக்கிறது (ஸத் பா வம்) என்று

நிரூபிக்க நமக்கு ஒரு பிரமாணம் (கருவி-உபகரணம்) தேவைப்படுகிறது.

கண்ணால் காண்பதுதான் இங்கு பூனையைக் குறித்த பிரமாணம். சப்தத்திற்குக் காதுகள் பிரமாணம். இப்படி ஐம்புலன்களும் பிரமாணங் களாக இருந்து பொருள் இருப்பதை நமக்கு நிரூபிக்கின்றன.

புலன்களால் ஒரு பொருளை நிரூபிக்க முடியா விட்டால் முன்பு கண்ட நிரூபணத்தின் அடிப்படையில் அனுமானத்தின் துணை கொண்டு நிரூபிக்கிறோம். அனுமானமும் ஒரு பிரமாணம் தான். இந்த ‘அறையில் பூனை இல்லை’ என்கிறேன். ‘எப்படிச் சொல்கிறீர்கள்’ என்கிறீர்கள்.

‘முன்பு கண்களால் எப்படிப் பார்த்துச் சொன்னேனோ அதுபோல் அதே கண்களைப் பயன்படுத்தி அதே இடத்தில் இப்போது பூனை இல்லை என்பதையும் ‘பார்த்துத்தான்’ சொல்கிறேன்’என்பேன். இல்லை என்பதையும் பிரமாணத்தால் நிரூபிக்க முடியும். பூனையின் ‘ஸத்பா வத்தை’ (உள்ளதை) எப்படிக் காட்சிப் பிரமாணத்தால் கூறினேனோ அதுபோல் அதன்

அஸத்பா வத்தையும் அதே காட்சிப் பிரமாணத்தால் அறிந்து கூறுகிறேன்.

மங்கிய ஒளியில் கயிறு பாம்புபோல் தெரிகிறது. அந்த

பாம்பு, வெளிச்சம் வந்ததும் தெரியவில்லை. அந்தப் பாம்பு

ஸத்தா (இருப்பு) அல்லது அஸத்தா? (இருப்பற்ற)

மங்கிய ஒளியில் அது ஸத். பிரகாசமான ஒளியில் அது

அஸத். அறியாதபோது ஸத். அறிந்ததும் அது அஸத்.

அனுபவத்தில் அது ஸத். அறிவில் அது அஸத்.

இதுபோல் கானல்நீர் கூட அனுபவத்திற்கு ஸத்தாகவே

இருக்கிறது. அதே சமயம் அந்த நீர் பருகப்பயன்படாது, அது

நிச்சயமாக இல்லவே இல்லை என்று அறிவு சொல்கிறது.

அனுபவம் ஒரு பிரமாணம். அறிவு இன்னொரு பிரமாணம். இதில் எந்தப் பிரமாணத்தை நாம் எடுத்துக்கொள்கிறோம்?

நிச்சயம் யாரும் அனுபவப் பிரமாணத்தை நம்பி நீர் பருக

கானல்நீரை நெருங்க மாட்டார்கள். நெருங்க நெருங்க அது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும். அதுபோல்தான் பாம்பும்.

யாதொன்று அனுபவத்திற்கு ஸத்தாகவும் அறிவிற்கு அது

அஸத்தாகவும் இருக்கிறதோ அதுதான் மித்தியா. அது

உண்மையில் இல்லை, ஆனால் அனுபவத்திற்கு இருக்கிறது.

அனுபவத்துக்கு இல்லாததெல்லாம் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. அறிவுதான் கடைசி நிரூபணம். ஏனெனில் நாம் உட்கார்ந்தும், நின்றும், ரயிலில்

பயணித்துக் கொண்டும், விமானத்தில் பறந்துகொண்டும்

இருக்கும் இந்த பூமி நிலையாக இருப்பதாக அனுபவ ஞானம் சொல்கிறது. ஆனால், பூமி மணிக்கு 1,609 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்றுகொண்டும், மணிக்கு லட்சத்து எட்டாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை வலம் வந்து கொண்டும் இருக்கிறது என்று அறிவியல் சொல்கிறது. இதில் எது உண்மை. இரண்டும் உண்மையாக இருக்க முடியாது.

விவகாரத்திற்கு, பூமி அசையாமல் இருப்பதாக எடுத்துக்கொண்டு வாழ்கிறோம். ராக்கெட் லாஞ்சிங் செய்வதற்கு, பூமியின் சுழற்சி மற்றும் வலம்

வரும் வேகத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.

இல்லாவிடில் நிலாவுக்கோ செவ்வாய்க்கோ செயற்கைக்

கோள்களை அனுப்ப முடியாது.

1.மித்தியா என்பது உளதும் இலதுமாக இருப்பது.

2.திருஷ்ட நஷ்ட சுபாவம் உள்ளது. காணும்போதே மாறிக்கொண்டி ருப்பது. திரைப்படம் வினாடிக்கு 25 ஃப்ரேம்களை மாற்றிக்கொண்டி ருப்பது தெரியாமலேஸ அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

3.முன்பு இல்லாமல், பிறகும் இல்லாமல் தற்போது மட்டும் இருப்பதுபோல் இருந்து மறையும் தன்மையது.

4.வெறும் நாம ரூபக் கூட்டமானது. ஆதாரமான பிரஜ்ஞானத்தைச் சார்ந்து அறியப்படும் ரூபங்கள் மற்றும், செயல்களின் பெயர்கள் மாத்திரமே. மித்தியா பற்றிய இந்த நான்கு வரையறைகளும்

சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டியவை.

“ஒவ்வொருவரும் தமது உடல், மனம், புலன்கள், உறவுகள், சம்பவங்கள்,

புலன் விஷயங்கள் அனைத்தும் ஸத்தியமா அல்லது

மித்தியாவா என்று இந்த நான்கு வரையறைகளைக்

கொண்டு விசாரித்து அறிந்துகொள்ள வேண்டும்.” அனைத்தாலும் மித்தியா என்பது மாறிக்கொண்டே, மாறாமல் இருப்பது என்பது தீர்வாகிறது. இப்படிப்பட்ட நித்தியத்தை ‘பிரவாக நித்தியம்’ என்று அழைக்கிறோம்.

இந்த மித்தியாவுக்கு ஆதாரமாக இருக்கும் ஸத்தியம், மாறாதிருக்கும் தன்மையதால் அதைக் ‘கூடஸ்த நித்தியம்’

என்று அழைக்கிறோம்.

நீ மாறாதிருந்து மித்தியாவை, பிரவாக நித்தியத்தை அறிவதால் நீ கூடஸ்த நித்தியம். இந்த இரண்டும் தான் உள்ளவை. ஒன்று பிரவாக நித்தியமான மித்தியா மற்றது கூடஸ்த நித்தியமான ஸத்தியம்.

ப்ரம்மாத்மா கூடஸ்தவ நித்தியம். மாயாவினால் (கற்பனை) உண்டான ஜகத் (உலகம்) பிரவாக நித்தியத்து வமானது.

இதுதான் அறிந்து கொள்ள வேண்டிய #உண்மை!

Previous Post

ஆவணி மாத சந்திர தரிசனம்

Next Post

விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னென்ன?

Next Post
விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னென்ன?

விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னென்ன?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை?

சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை?

September 20, 2026
“கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?”

“கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?”

September 19, 2026
அருகம்புல் சித்தர்

அருகம்புல் சித்தர்

September 18, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <