• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஆனந்தம் கொண்டு வரும் ஆடி18ம் பெருக்கு

siddharbhoomi by siddharbhoomi
August 3, 2021
in ஆன்மிகம்
0
ஆனந்தம் கொண்டு வரும் ஆடி18ம் பெருக்கு
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஆனந்தம் கொண்டு வரும் ஆடி18ம்பெருக்கு.

அது ஏன்பதினெட்டு.?

பதினெட்டு என்ற எண் ‘ஜய’த்தை அதாவது வெற்றியைக் குறிக்கும்.

மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.

இந்த முறையிலேயே, நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நமது முன்னோர்கள்,

உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் அந்தக் காவிரி அன்னைக்கு, ஆடிப் பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடினார்கள்.

அந்த ஆடிப் பதினெட்டு விழாவில் பெண்களே அதிக அளவில் பங்கு கொள்வார்கள். விழாவுக்குப் பத்து நாட்கள் முன்னதாகவே, ஒரு தட்டில் நவதானியங்களை தூவி, தண்ணீர் தெளித்து, சிறிதளவு மண்ணையோ அல்லது எருவையோ கலந்து மூடி வைப்பார்கள். விழாவுக்குள் அது முளைத்து, வெண்மையாக வளர்ந்து இருக்கும்.

இதை ‘முளைப்பாலிகை’ என்பார்கள் (முளைப்பாரி என்றும் சொல்வதுண்டு.) ஆடிப் பதினெட்டு தினத்தன்று பெண்கள் இந்த முளைப்பாலிகையைக் கையில் ஏந்தி, பிற்பகல் வேளையில் அணிவகுத்தபடி ஆற்றங்கரைக்குச் செல்வார்கள்.

அப்படிப் போகும்போது, வழியில் முக்கியமான இடங்களில் முளைப்பாலிகையைத் தங்கள் தலையிலிருந்து இறக்கி வைத்து, பெண்கள் வட்டமாக நின்று கும்மியடிப்பார்கல். இந்த ஊர்வலம் ஆற்றங்கரை போய்ச் சேர்வதற்கு ஏறத்தாழ மூன்று மணி நேரமாகும்.

ஆற்றங்கரையில் தூய்மையான ஓர் இடத்தில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்திருப்பார்கள். அவர் முன்னால், முளைப்பாலிகைத் தட்டுகள் வரிசையாக வைக்கப்படும்.

அதன் பிறகு, ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, சர்க்கரை போட்டுத் தண்ணீர் ஊற்றிக் கலந்து, அந்தப் பாத்திரங்களை பிள்ளையார் முன் அடுக்கி வைத்துப் பிரார்த்திப்பார்கள். சூடம் ஏற்றி வணங்குவார்கள்.

அப்போது பழுத்த சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்கள் எல்லோருக்கும் மஞ்சள் தடவிய நூல் கயிற்றைக் கொடுப்பார். அதைச் சிலர், கழுத்திலும் சிலர், கையிலும் கட்டிக் கொள்வார்கள்.

இதன் பிறகு பெண்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று கோலாட்டம், கும்மி என்று ஆடுவார்கள். இது முடிந்ததும், அவரவர் கொண்டுவந்த முளைப்பாலிகைத் தட்டுடன் ஆற்றில் இறங்குவார்கள்.

முளைப்பாலிகையைச் சிறிது சிறிதாக எடுத்து ஆற்றில் விடுவார்கள். வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தாலான பனை ஓலைகளைச் சிறிய வட்டமாகச் சுற்றிச் செய்யப்பட்ட காதோலையையும், சிறிய கறுப்பு மணிகளாலான கருகமணியையும் ஆற்றில் விடுவார்கள்.

‘பொங்கிப் பெருக்கெடுத்து ஓடிவரும் காவிரி அன்னையின் வரவால் பயிர், பச்சைகளெல்லாம் முளைவிட்டுத் தழைக்கப் போகின்றன. இப்போது அவள் மசக்கையாக இருக்கிறாள்!’ என்ற ஐதீகத்தில்தான் இவ்வாறெல்லாம் செய்யப்படுகின்றன.

Previous Post

வரலாற்றில் இன்று – ஆகஸ்ட் 3

Next Post

வரலாற்றில் இன்று – ஆகஸ்ட் 4

Next Post
வரலாற்றில் இன்று – ஆகஸ்ட் 4

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் 4

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

புத்திசாலி சிறுவனும் கோவில் மர்மமும்

புத்திசாலி சிறுவனும் கோவில் மர்மமும்

March 12, 2026
‘மோட்ச தீபம்’ ஏற்றும் முறை மற்றும் அதன் ஆன்மீக பலன்கள்?

‘மோட்ச தீபம்’ ஏற்றும் முறை மற்றும் அதன் ஆன்மீக பலன்கள்?

March 11, 2026
இறந்த வீட்டில் சிவபுராணம் பாடுவது?

இறந்த வீட்டில் சிவபுராணம் பாடுவது?

March 10, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »