உருவாமாகி பாலபருவத்தில் அருவமாகி, சிந்தையில் நிறைந்து விந்தைகள் புரிந்து கொண்டிருக்கும் குருநாதர் அருள்மிகு ஸ்ரீ நிழல் சித்தர்.
“குருவின் கடமையும், பொறுப்பும்”
1. சரியான சீடனை தேர்ந்தெடுக்காவிட்டால்! முதல் குற்றம் யாருக்கு வரும்?
சரியான சீடனை தேர்ந்தெடுக்காவிட்டால்! முதல் குற்றம் குருவுக்கு தான் வரும்.
2. ஒருவருக்கு தீட்சை கொடுத்தால்,
சீடன் வித்தையை சரியாக செய்கின்றாரா? என்று குரு கவனிப்பாரா?
ஒருவருக்கு தீட்சை கொடுத்தால்!
அந்த வித்தையை சீடர் சரியாக செய்கின்றாரா? என்று குரு பொறுப்பாக கவனித்து கொண்டே இருப்பார்.
3. சீடனை ஒழுங்கு முறைக்கு கொண்டுவர குருவால் முடியுமா?
ஒரு சீடனை பார்வையினாலேயே ஒழுங்கு முறைக்கு கொண்டு வரும் வல்லமை குருவிற்கு உண்டு.
4. அனைத்து சீடர்களுக்கும் குரு இறைவனை காட்டிக் கொடுப்பாரா?
குருபக்தி இரண்டாம் தரமாக இருக்கும் வரை எந்த குருவும் இறைவனை காட்டி கொடுக்க மாட்டார்.
5. குரு சீடனைப் பற்றி மனதில் என்ன நினைத்தால்! காட்டிக் கொடுக்க மாட்டார்?
இவன் துஷ்பிரயோகம் செய்து விடுவான் என்று நினைத்தாலே! குரு அவனுக்கு ஏழாம் அறிவையும், மூன்றாம் கண்ணையும் காட்டிக் கொடுக்கவே மாட்டார்.
6. ஸ்ரீ நிழல் சித்தர் என்ன கூறுகிறார்?
நான் சொல்கின்ற ஒவ்வொன்றும் உங்கள் அனுபவத்தில் இருந்த ஒன்றேதான்!
மாயையால் உங்களுக்கு தெரியாத ஒன்றை உங்கள் அனுபவத்திற்கும் நினைவிருக்கும் கொண்டு வருகின்றேன், என்று கூறுகிறார்.











