பிறவா பெருநிலை அளிக்கும் ஞானாலயம்
நாம் எதை நோக்கிச் செல்கின்றோம்? மனிதப் பிறவியின் நோக்கம் தான் என்ன? இயந்திர வாழ்க்கையில் சிக்குண்டு மாயையில் மயங்கி கொண்டு நம்முள் இயங்குகின்ற இயக்கத்தை அறியாமல் மாயை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஓடிக்கொண்டிருக்கும் மனிதரை நிறுத்திய கோரோனா என்ற நோய் உனக்குள் இயங்குவதை உணரு என்று கூறியது. இல்வாழ்வில் சுகம் வேண்டும், தனம் வேண்டும், தானியம் வேண்டும், நிலம் வேண்டும், நீர் வேண்டும், பொருள் வேண்டும், புகழ் வேண்டும், பிணியற்ற உடல் வேண்டும் இவ்வரங்கள் பெற்றிடவே தெய்வங்களும் அருள வேண்டும். அனைத்தும்
இவ்விதமே எண்ணுகின்ற மானுடரின் மனங்கள் யாவும் தன்னுள் வீற்றிருக்கும் ஆத்மாவினை உணரவேண்டும். ஆத்மா என்பது என்ன? அது எங்கு உள்ளது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் ஆன்ம விடுதலை என்றால் என்ன? எவ்விதம் ஆத்மாவை விடுவிப்பது என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.
இக்கலிகாலத்தில் சுய முயற்சியில் ஆத்மாவை அறிவது மிக மிக கடினம். மாயை கன்மம் ஆணவம் இம்மூன்றும் சூழப்பட்ட ஆத்மாவை விடுவிப்பதே ஆன்ம விடுதலையாகும். அதுவே பிறவா வரம் பெறுவது.
பிறவா வரம் – முக்திநிலை இவற்றை எப்படி அடைவது? இந்த பிறவா வரம் குறித்து அற்புத தகவல்கள் ஞானாலயத்தில் வழங்கப்படுகிறது.
ஞானாலயம் எனும் திருக்கோவில், இந்தியாவில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் 1997 ஆம் ஆண்டில் குரு அன்னை திருமதி. பரிமளா ராஜு அவர்களால் நிறுவப்பட்டதாகும். அகத்தியர் தலைமையில், சப்த ரிஷிகளும், முருகப்பெருமான் உடன் 18 ஆற்றல்களும், நவநாதசித்தர்கள், நவதேவியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தெய்வீக ஆற்றல்கள் இறங்கிய இடம் இவ்வாலயம் ஆகும்.
ஜனவரி 18, 1998 அன்று இந்த ஆலயம் திறக்கப்பட்டது. ஞானாலயம் கோவிலின் வடிவமைப்பு, குரு அன்னையின் ஆவீர்பாவதில் தோன்றிய அமைப்பாகும். அக்டோபர் 2008இல், “அணையாதீபம்” ஞானாலயத்தில் ஏற்றப்பட்டது.
கலியுகத்தில் கலங்கரை விளக்கமாக, ஞானத்திற்கு என்றே அமைக்கப்பட்ட ஆலயமாம் ஞானாலயம் தனில் சூரியனின் மையத்தையும் பூமியின் மையத்தையும் இணைக்கும் ஓர் அற்புத “ஒளிப்பாலம்” குரு அன்னை அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஒளி பாலத்தின் வழியாக உயர் ஆற்றல்கள் பூமிக்கு இறங்கி வந்து, ஞானாலயத்திற்குள்அமைந்துள்ள மைய ஜோதியில் வீற்றிருக்கிறார்கள்.
நாம் இன்று கலியுகத்தின் இறுதி காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சதுர்யுகத்தின் நான்கு யுகங்களின் தொடக்க நிலையாகிய சத்யயுகம் பூமியில் பூக்க ஆரம்பித்துவிட்டது. சத்ய யுகத்திற்கான ஆன்ம வித்துக்களை சேகரிக்க, சப்த ரிஷிகள் உட்பட, சித்தர்கள், முருகப் பெருமான், மகா அவதார் பாபாஜி, திருவருட்பிரகாச வள்ளலார், ஷீர்டி சாய் நாதர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பல உயர் தெய்வீக ஆற்றல்கள் ஞானாலய ஸ்தலத்தில் இறங்கியுள்ளனர்.
இதுவரை எங்கும் வெளியிடப்படாத ஆன்மிக ரகசியங்களையும் மனித மூளையிலுள்ள ஆன்ம அணுவினை பற்றியும், துணை அணுக்கள் பற்றியும், சிறைப்பட்டுள்ள பாதரச ஆன்ம துகள்கள்,
தலைமை சுரபீ மற்றும் அதை சுற்றியுள்ள் இதுவரை யாரும் அறிந்திடாத ஆறு சுரபிகள் பற்றியும், சூரிய ஒளியில் உள்ள ஆற்றல்கள் குறித்தும், பல விஞ்ஞான பூர்வமான தகவல்களையும், கடந்த ஐந்து வருடங்களாக,
குரு அன்னையின் முதல் சீடர் அவர்களின் மூலம் தினந்தோறும், சிந்தனையின் வாயிலாக உரையாடி, தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். அவை யாவும் எங்கள் இணையதளத்திலும், யூட்யூப்பிலும், புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளது.
அதில் குறிப்பிடத்தக்கவை முருகப்பெருமான் அவர்கள் அருளிய நான்கு வேத நூல்களாகும். முருகப்பெருமான் அவர்களின் அறிவுரைப்படி அதில் சில புத்தகங்களை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளோம்.
இந்த கலியுகத்தின் முடிவில் மனிதர்களின் ஆத்மாக்களை அழிவில் இருந்து காப்பதற்காக, ஞானாலயத்தில் ஆத்ம விடுதலை என்ற ஒரு மாபெரும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
விடுதலை அடைந்த ஒவ்வொரு ஆத்மாவும் சத்திய யுகத்திற்கான வித்துக்களாக சேகரிக்கப்படுவர். ஞானாலயத்தில் வழங்கப்படும் ஸ்ரீ ரேணுகா தேவியின் மந்திர உபதேசத்தை பெறுவதன் மூலம்,
பிறவா பெருநிலை அளிக்கும் “ஆன்ம விடுதலை” என்ற நிகழ்வில் கலந்துகொள்ளலாம். ஓர் மனித
ஆன்மாவிற்கு அதன் வாழ்நாளில் ஒரே ஒருமுறை வழங்கபடும் இந்த அற்புத ஆன்ம விடுதலையானது
அகத்திய மகரிஷிகள் மற்றும் குரு அன்னை அவர்களால் உயர் ஆத்மாக்களின் துணை கொண்டு
நடத்தப்படுகிறது. உயர் ஆற்றல்கள் பூமிக்கு இறங்கி வந்த அதே ஒளி பாலம் வழியாக ஆன்ம
விடுதலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆத்மாக்கள் ஆன்ம விடுதலை அடைவர்.
குரு அன்னை திருமதி பரிமளா ராஜு அவர்கள் ஆதிசக்தியாகிய ரேணுகா தேவியின் அவதாரம் ஆவார்.
ஒவ்வொரு கலியுக முடிவிலும் மனித ஆத்மாக்களை பாதுகாப்பதற்காகவும் சத்ய யுக வித்துக்களை சேகரிப்பதற்காகவும் ஒரு தெய்வம் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.
அதுபோல், இந்த கலியுகத்தின் முடிவில், இந்த மாபெரும் இறை பணியாற்ற ரேணுகாதேவியின் அம்சமாய் குரு அன்னை, ஞானாலயத்தில் வீற்றிருக்கிறார்கள்.
18 வட்ட மலர்களை ஆன்ம விடுதலை அடைய செய்ய நியமிக்கப்பட்ட நமது குரு அன்னை திருமதி பரிமளா ராஜு அவர்கள் 2020, செப்டம்பர் 14ஆம் தேதி மஹாசமாதி அடைந்தார்.
கலியுக முடிவில் மனித ஆன்மாக்களை காப்பதற்காக நான்கு யுகங்களாக, பலமுறை ஒளியுடல் பெற்று, மீண்டும் பிறவி பல கண்ட காரணத்தால், அகத்திய மகரிஷிகளால் “சதுர்வேதி” என்றே அழைக்கப்படுகின்ற குரு அன்னை,ஒளி ரூபம் கொண்டு தொடர்ந்து ஞானாலயத்தில் உரையாடி, வழிகாட்டி வருகிறார்.
ஞானாலயத்தில் தரப்படும் ரேணுகாதேவி மந்திர உபதேசம் பெறுவதன் மூலம் ஒருவரால் தன்னுடைய மூளைப்பகுதியில் உள்ள பீனியல் கிளாண்ட் என்கின்ற சுரபியை இயக்க முடியும்.
அதன்மூலமாக அறியாமை நீங்கி பிரபஞ்ச ஆற்றல்களைப் பெற்று, ஆன்ம விடுதலை அடைய முடியும். கலியுகத்தின் முடிவு என்பதாலும் பூமித்தாய் தன்னை புதுப்பித்துக் கொண்டிருப்பதாலும் பல்வேறு பிணிகளும், இயற்கை சீற்றங்களும் பூமியை நெருங்குகின்றது.
அதன்மூலம், ஆன்ம விடுதலை பெறாத மானுடர்களின் ஆத்மாக்கள் கலியின் எல்லையில் அழிவுறும் என்றுமே முருகப்பெருமானும் அகத்திய மகரிஷிகளும் எச்சரிக்கின்றனர். மாயை, கர்மவினை மற்றும் ஆணவத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கு ஆன்ம விடுதலை ஒன்றே தீர்வாகும்.
மானுடராய் பிறவி கொண்டால் மாயைகளும் சூழ்ந்து விடும்.
ஆன்மாவின் ஒளிருபம் அரையிருளில் மூழ்கிவிடும்.
விழிகளை மலர்த்திட்டாள் மாயைகளும் விலகிவிடும்
திரைகள் யாவும் விலகி நின்றால் ஆத்ம ஒளி மிளிர்ந்துவிடும். கலியுகத்தின் எல்லைக்காலம் இருள் சூழ்ந்தே நின்றிருக்கும். ஆத்மாவின் ஒளி ஒன்றே எல்லையினை உணர்த்திவிடும்.
ஜாதி, மதம், நாடு ஆகியவற்றை கடந்து, உண்மையான வாழ்க்கையின் நோக்கத்தினை புரிந்து கொள்ள அனைவரையும் ஞானாலயத்திற்கு அன்போடு வரவேற்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு, குரு அன்னையின் மைந்தன் தொடர்புகொள்ளவும்:
ஞானாலயம், ஒளியை நோக்கிய உன்னதப் பயணம், No: 27, Jeeva Street, Muthirayarpalayam, Pondicherry – 605 009, INDIA











