ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி
இந்த முப்பெரும் சக்திகள் இல்லாமல் உலக இயக்கம் என்பதே இல்லை உலகம் என்றால் அதில் அசையும் பொருள் அசையா பொருள் அனைத்தும் அடக்கம்
இந்த மூன்று சக்திகள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறு பங்கு கொள்கிறது பார்க்கலாம்
ஒருவனின் வாழ்க்கையில் தன்னுடைய அம்சமான 3 சக்திகள் மட்டுமே ஒருவனின் வாழ்க்கையை கர்மத்தை தீர்மானிக்கிறது…. இதில் எதாவது ஒரு சக்தி குறைந்தாலும் அவனுக்கு வாழ்க்கை பிடிப்பில்லாமல் போகும்
ஞான சக்தி – தாய்
இச்சா சக்தி – மனைவி
கிரியா சக்தி – மகள்
இந்த மூன்று வடிவத்திலே அன்னை நமக்கு வாழ்க்கையோடு வருகிறாள் அதெப்படி இந்த 3 நபர்களும் 3 சக்தி ஆக முடியும் என்று தோன்றலாம் அதன் விளக்கம் இதோ
ஒரு குழந்தைக்கு உலகத்தின் முதல் குரு தாய் மட்டுமே அவளினால் தான் நமக்கு ஞானம் பிறக்கிறது அவளே ஞான சக்தி
ஒருவனின் சரிபாதி ஆகி அவனின் இச்சைகள் அனைத்திற்கும் காரணமாக விளங்கும் மனைவி இச்சா சக்தி
தனக்கு பிறக்கும் மகளை நல் வாழ்க்கை அமைத்து கொடுக்க நம்மை முழுவதுமாக இயக்கி ஓட வைப்பது கிரியா சக்தி
இச்சா சக்தியும் கிரியா சக்தியும் ஒன்றிணைந்தவை இதன் இயக்கத்தை தீர்ப்பணிப்பது ஞான சக்தி ஆகும்
சிவன் – சதி தேவி, பார்வதி தேவி, கங்கா தேவி
மகா விஷ்ணு – ஸ்ரீ தேவி, பூதேவி, ஆனந்தவல்லி
பிரம்மாவிற்கு 1 சக்தி மட்டுமே
முருகன் – வேல், வள்ளி, தெய்வானை
விநாயகர் – அவரின் உடம்பு, சித்தி, புத்தி ( தலை ஈசன் குடுத்தது உடம்பு மட்டுமே அன்னைக்கு சொந்தம் )
இப்படி சொல்லி கொண்டே போகலாம்
எனவே தாய் மனைவி மகள் இவர்களை மனம் கோணாமல் நடந்து கொண்டாலே தெய்வம் தானாக தேடி வரும் நாம் தெய்வத்தை தேடி அலைய வேண்டியது இல்லை











