சிவன் கோயில்களில் இறைவனின் சந்நிதிக்கு எதிராக நந்தியம் பெருமான் வாகனமாக வீற்றிருப்பார். அனைத்து சிவாலயங்களிலும் இதுபோன்ற அமைப்பில்தான் நந்தியை தரிசனம் செய்ய முடியும். ஆனால் திருச்சியில் உள்ள உய்யக்கொண்டான் மலை மீது உள்ள உஜ்ஜீவநாதர் கோயிலில் குழந்தை வடிவத்தில் நந்தியம் பெருமானை தரிசனம் செய்யலாம். இந்த ஆலயத்தில் ஆதிபராசக்தியே ஜேஷ்டா தேவியாக அருள்பாலிப்பதாக ஐதீகம்.
இந்த அம்பிகையின் கையில் நந்திகேஸ்வரர் குழந்தை வடிவத்தில் வீற்றிருக்கிறார். இந்த அன்னையை வழிபடுவதால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.











