திருவாதிரை களி செய்வது எப்படி?
ஆருத்திரா தரிசனம் அன்று மட்டுமே பெரும்பாலும் செய்யப்படும் இந்த களி சுவையில் சிறந்தது.
அரிசி 2 ஆழாக்கு
பயத்தம்பருப்பு 3/4 ஆழாக்கு
வெல்லம் 1/2 கிலோ
தேங்காய் துருவல் 1 மூடி
ஏலக்காய் 5
முந்திரி 10
நெய் 200 கிராம்
அரிசி , பயத்தம் பருப்பு இரண்டும் தனித்தனியாக வறுத்து, மிக்சியில் தனித்தனியாக ரவை பதத்தில் பொடித்துக்கொள்ளவும் . இப்பொழுது இரண்டும் ஒன்றாக சேர்க்கவும் . வெல்லம் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்
அடுப்பில் கெட்டியான பாத்திரம் ஏற்றி , அதில் வெல்லாம் கரைத்த
நீரை ஊற்றி அதில் தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் நன்றாக
கொதிவந்ததும் பொடி செய்து வைத்துள்ள அரிசி + பயத்தம் பருப்பு சேர்த்து நன்றாக கலந்து குக்கரில் வைத்து விடவும் .
நன்றாக 6 விசில் சத்தம் வரை அடுப்பில் வைத்து பிறகு , அடுப்பில் இருந்து இறக்கிவிடவும் .
நெய்யில் முந்திரி பருப்பு வறுத்து போடவும் , ஏலக்காய் பொடி செய்து போடவும் .
நெய் அதிகமாக விட்டு கிளறவும் – சுவை கூடும் சுவையான திருவாதிரை களி தயார்.











