மன குழப்பம் நீங்கி, நிம்மதி உண்டாகும்
பெளர்ணமி, அமாவாசை, சந்திர தரிசன தினங்கள் என சந்திர பகவானுக்குரிய நாட்களில் நாம் சந்திரனை வழிபட்டு வர மன குழப்பம் நீங்கி, நிம்மதி உண்டாகும். முகத்தில் புது பொழிவு ஏற்படும்.
மனோகாரகனான சந்திரனை வழிபடும் போது நம் மனம் தெளிவு பெற்று நாம் செய்யும் செயலில் நேர்த்தி உண்டாகும்.
மன அமைதி, அழகு பெற சொல்ல வேண்டிய சந்திர பகவானுக்குறிய மந்திரம்
பெளர்ணமி தினங்களிலும், திங்கட் கிழமை தோறும் (4ம் பிறை தவிர) இரவில் 8 மணி முதல் 9 மணி வரை கீழே குறிப்பிட்டுள்ள ஸ்ரீ சந்திர பகவானுக்கு உரிய மந்திரங்களை கிழக்கு திசை பார்த்து அமர்ந்து குறைந்தது 27 முறை, அதிகபட்சம் 108 முறை ஜெபிக்கவும்.
இதனால் நாம் அழகு பெறுவதோடு, நம் கோபங்கள் குறைந்து மன தெளிவும், சாந்தமும் உண்டாகும்.
சந்திர பகவானை வணங்குவதால் சிவ பெருமான், பார்வதி தேவி, மகா லட்சுமி, விநாயகப்பெருமானின் அருளைப் பெற்றிட முடியும்.
🌜
குறிப்பாக பரு, மிருதுவான தோல் விரும்பக் கூடிய பெண்கள் இந்த மந்திரங்களை சொல்லி வரவும் இந்த மந்திரத்தை சொல்ல நினைப்பவர்கள் பெளர்ணமி அல்லது வளர்பிறை நாட்களில் தொடங்கலாம்.
🌜
சந்திரன் மூல மந்திரம்:
🌜
ஒம் ஹ்ரீம் வம் சந்திர தேவாய நமஹ
காரியத்தடை நீக்கும் சந்திரன் வழிபாடு
சிவனின் சடைமேல் சிறப்புடன் விளங்கும்
மதியே உன்னை மகிழ்வுடன் துதித்தேன்!
நிறத்தில் வெண்மையும், நெல்லாம் தான்யமும்
சிறப்புடன் வழங்கச் செல்வம் கொடுப்பாய்!
முத்தாம் ரத்தினம் முழுமலர்
அல்லி வைத்தோம் உனக்கு வரம்தருவாயே!
புத்தி பலம்பெற பொன்பொருள்
குவிய சக்தி வழங்கும் சந்திரா வருக!
🌜
சந்திரனுக்குரிய இந்த பாடலை நாம் தினமும்பாடி வர நம் வாழ்வில் இருக்கும் காரிய தடைகள், மனக் கவலைகள் நீங்கி அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறலாம்.
மனது காரன், மாதா காரகன் எனப்படும் சந்திரனை வணங்கும் போது நாம் சிந்தனை திறன் வளப்படுவதோடு, புது திட்டங்களை செயல்படுத்தும் போது நன்கு ஆராயும் திறன் கிடைக்கிறது.
🌜
மூல மந்திரம்
🌜
“ஓம் ஸ்ரம் ஸ் ரீம் ஸ்ரௌம் ஷக சந்திராய நமஹ”,
இந்த மூல மந்திரத்தை 48 நாட்களில் 10,008 முறை சொல்ல வேண்டும்.
🌜
சந்திரனுக்கு உரிய ஸ்தோத்திரம்
🌜
ததி சங்க துஷாராபம்
ஷீரோதார்ணவஸம்பவம்!
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் மகுடபூஷணம்!
சந்திர காயத்ரி மந்திரம்
பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி|
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||











