எந்த அதிசயமும் தானாய் எழும்பாது அந்த அதிசயமாய் நீயே மாறு.
யாரிடமும் தாழ்ந்து போகாதே. அவ்வளவு சீக்கிரம் இந்த வாழ்க்கை வாழ விடாது.
சுற்றி சுற்றி சுழட்டி அடிக்கும். ஏமாற்றுபவ ர்களுக்கும் துரோகம் செய்தவர்களுக்கே வளைந்து கொடுக்கும்.
நீ போகும் பாதை சரியில்லை என கதறுவர். கத்தி கதறி ஓய்ந்து போகட்டும் கண்டு கொள்ளாதே. லட்சியம் நம் கண் முன்னே தெரிந்தால் மற்றது எல்லாம் அலட்சியமாக தெரியும்படி பார்த்துக் கொள் முன்னேறி விடுவாய்.
கழுத்தை பிடிக்கும் நிலை வந்தாலும் தன் மானம் என்னும் கவசத்தை கைவிடாதே எக்காரணம் கொண்டும். எவர் முன்னும் எப்படியாயினும் மண்டியிடாதே..
உன் வீழ்ச்சி தான் மற்றவர்களின் சூழ்ச்சி.
புரிந்து கொள். அவர்களுக்கு தேவை உன் தோல்வி அல்ல உன் தலை கவிழ்ந்த முகத் திலான கண்ணீர். அதை காட்டி விடாதே..
கரைந்து போவார்கள் என மனக்கணக்கு போடாதே..எதிர்பார்ப்பார்கள் மனதுக்குள் கைகொட்டி சிரித்து கொண்டிருப்பார்கள்..
வெற்றியை ருசிக்கும் வரை இதையெல் லாம் பொருட்படுத்தாதே..
எந்த அதிசயமும் தானாய் எழும்பாது அந்த அதிசயமாய் நீயே மாறு அவமானங்களை அடை காத்து திமிராக நட. அனைத்தும்
உன்னை நோக்கி ஓடிவரும். பிடித்த செயல்களை துணிந்து செய். பிடித்தமானவரின் மடி தேடு. தொலை தூரம் தனியாக நட ந்து செல். இரவின் தனிமையை ரசி. வாழ் ந்து கொண்டிருப்பவரை உற்று கவனி.
உனக்கானது உன்னிடம் வந்து அடைந்தே தீரும். ஓடிக்கொண்டே இரு.
🙏🙏🙏ஓம் ஸ்ரீ சாய் ராம்🙏🙏🙏











